லிப்ஸ்டிக் பெண்கள் பயன்படுத்தும் மேக்கப் பொருட்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகவும். ஒவ்வொரு பெண்ணும் உதட்டில் லிப்ஸ்டிக் போட்டு தங்களை அழகாக காட்டிக்கொள்வதை விரும்புகிறார்கள். லிப்டிக் போடுவது அழகாக இருந்தாலும் அவை உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் அதில் பல விதமான கெமிக்கல்கள் நிறைந்துள்ளது, அவை நமக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.
நச்சு உட்கொள்ளல் : நாம் அன்றாடம் பயன்படுத்தும் லிப்ஸ்டிக்ஸில் மாங்கனீசு, காட்மியம், குரோமியம் மற்றும் அலுமினியம் போன்றவை நிறைந்துள்ளது. மேலும் இந்த தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் அனைத்தும் உங்கள் உடலில் சேரும்போது நச்சுத்தன்மை ஏற்படுகிறது. பல பெண்கள் தற்செயலாக லிப்ஸ்டிக்கை உட்கொள்கிறார்கள், எனவே இந்த கெமிக்கல்கள் உங்கள் உடலுக்கு செல்கிறது. எனவே, உங்கள் லிப்ஸ்டிக் உயர் தரமானதாக இருப்பதை உறுதி செய்வது அவசியம், மேலும் நீங்கள் வாங்கும் முன்னர் அதில் இருக்கும் தயாரிப்பு பொருட்களை ஒருமுறை சரி செய்து கொள்வது அவசியம்.
தோல் ஒவ்வாமை : பெரும்பாலான லிப்ஸ்டிக்ஸ் பிஸ்மத் ஆக்ஸிகுளோரைடு என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இது சருமத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பது மட்டுமின்றி புற்றுநோய்களை ஏற்படுத்தும் பண்புகளையும் கொண்டுள்ளது, மேலும் இதிலுள்ள துத்தநாகம், ஈயம், குரோமியம், காட்மியு, பராபென்ஸ் மற்றும் மெக்னீசியம் போன்றவை நம் சருமத்தில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி பல தோல் ஒவ்வாமைகளை உண்டாக்கும். இதனால் பல்வேறு சரும பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
மூளை மற்றும் இதய பாதிப்பு : லிப்ஸ்டிக் உள்ள ஈயம் நமது உடலுக்குள் செல்வதால், இதய நோய்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இது கரோனரி பாதிப்பு மற்றும் இதய துடிப்பு மாறுபாடுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். மேலும், ஈயம் நமது நரம்பு மண்டலம் மற்றும் மூளையின் செயல்பாட்டை மிகவும் பாதிக்கிறது, இதனால் கால்-கை வலிப்பு ஏற்படும் மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.
மார்பக புற்றுநோய் : எஃப்.டி.ஏவால் அங்கீகரிக்கப்படாத அபாயகரமான நச்சு பொருட்கள் பல்வேறு லிப்ஸ்டிக்ஸ்களில் உள்ளது. இவை பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும். மேலும், லிப்ஸ்டிக்கில் உள்ள பாராபன்கள் பிற வியாதிகளுக்கும் வழிவகுக்கும். மேலும் கண்களில் எரிச்சல் மற்றும் இருமல் போன்ற பிற சிறிய பக்க விளைவுகளை முதலில் ஏற்படுத்தும் என்பதால் மருத்துவரை அணுகுவது நல்லது.
சிறுநீரக செயலிழப்பு : லிப்ஸ்டிக்கில் உள்ள காட்மியம் ஒரு ஹெவி மெட்டல், இது எதிர்பாராத விதமாக நமது உடலுக்கு சென்றாலும் நம் உடலின் கழிவு மேலாண்மை அமைப்பால் இதனை வெளியேற்ற முடியாது. இதனால், இவை கொஞ்சம் கொஞ்சமாக நம் சிறுநீரகங்களில் குவிந்து சிறுநீரகத்தின் செயல்பாட்டை பாதிக்கிறது. இது பெரும்பாலும் அதிக விலையில் விற்பனை செய்யப்படும் லிப்ஸ்டிக்களில் இருக்காது. எனவே மலிவானவற்றை வாங்கி பயன்படுத்த வேண்டாம்.
பார்கின்சன் : மாங்கனீசு போன்ற சில இரசாயனங்கள் நரம்பு மண்டல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், இது பார்கின்சன் போன்ற நரம்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். லிப்ஸ்டிக்கில் அதிகளவு மாங்கனீசு நிறைந்திருப்பதால், இது மிகவும் ஆபத்தானது. எனவே தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர்கள் இந்த நோயால் பபாதிக்க வாய்ப்புகள் உள்ளது. பார்கின்சன் நோய் (Parkinson's disease) என்பது மைய நரம்பு மண்டலத்தைச் சிதைக்கின்ற ஒரு நோய் ஆகும், பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இயக்கத்திறன்கள், பேச்சு மற்றும் மற்ற செயல்பாடுகள் சீராக இயங்கமாட்டாது.
குறிப்புக்கள் : * அதிக கெமிக்கல்கள் நிறைந்த லிப்ஸ்டிக்குளை பயன்படுத்தாதீர்கள். * லிப்ஸ்டிக்கின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை குறைக்கக் கூடிய தன்மை பெட்ரோலியம் ஜெல்லிக்கு இருப்பதால் அந்த லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம்.* வீட்டிலேயே இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்படும் லிப்ஸ்டிக்குகளை பயன்படுத்தலாம்.