மரபணுவும் காரணமாக இருக்கலாம். உடலில் ஆண்டி ஆக்ஸிடண்ட் சமமாக இல்லாதபோது ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அதிகரிக்கும். இதனால் மூலக்கூறுகள் உடல் செல்கள் சிதைக்கப்படுவதும், அதனால் முதுமை, பிற நோய்கள் உண்டாகும். இதனால் விட்டிலிகோ என்று சொல்லக் கூடிய வெண்குஷ்டமும் வரும். இந்த செல்களின் சிதைவு தலைமுடி வேர்களிலும் நிகழும். இதனால் மெலனின் முற்றிலுமாக தடைபட்டு தலைமுடி வெள்ளையாக மாறும்.
இன்று பலருக்கும் தலைமுடி வெள்ளையாக இருப்பதற்கு மன அழுத்தம், வேலை அழுத்தம் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இதுமட்டுமன்றி இதுபோன்ற மன அழுத்தத்தால் தொடரும் புகைப்பிடித்தல் பழக்கமும் கருகருவென இருக்கும் முடியை வெள்ளையாக்குகிறது. இதை 2013 வெளிவெந்த இத்தாலிய டெர்மடாலஜி ஆன்லைன் இதழும் உறுதி செய்து வெளியிட்டுள்ளது.
இவை தவிற தலை முடி பிரச்னைக்காக தீர்வு காண பயன்படுத்தப்படும் கெமிக்கல் பொருட்களும் காரணிகளாக இருக்கின்றன. ஹேர் டை, ஜெல் ஹேர் ஸ்ப்ரே, ஏன் ஷாம்பூ கூட காரணமாகலாம் என்கிறது ஆய்வு. இதுபோன்ற தலைமுடிக்கான பொருட்களில் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் பெர்ராக்ஸைட் தலைமுடி வேர்களை சேதப்படுத்தி, அதனால் மெலனின் சுரப்பையும் தடை செய்கிறது. குறிப்பாக இந்த கெமிக்கல் ஹேர் டைகளில்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இப்படி மேலே குறிப்பிட்டவற்றை தவிர்க்க ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த உணவை உண்ணுங்கள்.வைட்டமின் குறைபாடுகளை சரிசெய்யுங்கள்.குறிப்பாக புகைப்பழக்கத்தை கைவிடுங்கள். தலை முடி பிரச்னைகளுக்கு கெமிக்கல் பொருட்களை தவிர்த்து இயற்கையான வழிமுறைகளை பின்பற்றுங்கள். இவற்றை சரியாக செய்தாலே வெள்ளை முடியை வருவதைத் தவிர்க்கலாம்.