மஞ்சள்தான் பாரம்பரிய அழகுப் பொருளாக பெண்கள் பயன்படுத்தி வந்தனர். இரசாயனம் நிறைந்த கிரீம் பொருட்கள் இல்லாத காலங்களில் இந்த மஞ்சள்தான் அவர்களின் அழகு சாதனத்தின் முக்கிய பொருள். அதாவது ஃபவுண்டேஷன் போன்றது. பலரும் இன்று கெமிக்கல்களை தவிர்த்து ஆர்கானிக் முறைக்கு மாறுவதால் இந்த மஞ்சள் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆனாலும் இன்றைய பெண்கள் மஞ்சள் பயன்பாட்டில் சில தவறுகளை செய்கின்றனர். அவை தேவையற்ற சரும சேதங்களை உண்டாக்கும். எனவே அவை என்னென்ன என்பதை தெரிந்துகொண்டு சரி செய்யுங்கள்.
மஞ்சளை முகத்திற்கு தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் : இரசாயன கலப்படம் இல்லாத தூய மஞ்சளை முகத்திற்கு தடவுவதால் பல சருமப் பிரச்னைகளை தவிர்க்கலாம். அதோடு சருமத்தை பளபளப்பாக்கவும், வயதான தோற்றத்தை மறைக்கவும் மஞ்சள் உதவுகிறது. சருமத்தில் உண்டாகும் தொற்று, அழுக்கு, இறந்த செல்கள் அனைத்தையும் நீக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது. முகப்பருவை கூட நீக்கும். இப்படி பல சரும நன்மைகளை கொண்டிருக்கிறது.
மஞ்சளுடன் கலக்கப்படும் பொருட்கள் : அதாவது முகத்திற்கு மஞ்சள் அப்ளை செய்யும்போது ரோஸ் வாட்டர், பால் போன்ற மற்ற பொருட்களை கலந்து தடவக்கூடாது. ஏனெனில் அவை மஞ்சளுடன் கலக்கும்போது மஞ்சளின் நன்மைகள் குறைந்து எதிர்வினையாற்றும். குறிப்பாக மஞ்சளில் இருக்கும் குர்குமின் மஞ்சளின் முக்கிய பண்புகள் அனைத்தையும் அழித்துவிடும். எனவே தண்ணீர் தவிர வேறு எதுவும் பயன்படுத்தக் கூடாது.
மஞ்சளை நீண்ட நேரம் காய வைத்தல் : மஞ்சளை ஃபேஸ் பேக் போல் அப்ளை செய்கிறீர்கள் எனில் 20 நிமிடத்திற்குள் கழுவிவிட வேண்டும். இல்லையெனில் அதன் நிறம் அப்படியே ஒட்டிக்கொண்டு மஞ்சளாக தெரியும். இதனால் முகம் மஞ்சளாக இருந்தால் தோற்றம் சிறப்பாக இருக்காது. அதேபோல் நீண்ட நேரம் வைத்தல் தேவையற்ற சரும பக்கவிளைவுகளை உண்டாக்கும்.