இது சீரற்ற மற்றும் குழப்பமான அமைப்புகளை ஏற்படுத்தும், வெவ்வேறு திசைகளில் வெளியே நீட்டி கொண்டிருக்கும் அல்லது அவ்வப்போது சுருண்டு போகும் முடி இழைகளைக் குறிக்கிறது. ஃப்ரிஸ்ஸி ஹேர் என்பதை வறண்ட மற்றும் சிக்கு முடி எனலாம். பொதுவாக கூந்தலில் சிக்கு ஏற்படுவது மற்றும் வறண்டு போவது என்பது ஈரப்பதம் இல்லாததால் ஏற்படுகிறது. சரி, இந்த ஃப்ரிஸ்ஸி ஹேர் பிரச்சனையை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே எப்படி சமாளிப்பது என்று பார்க்கலாம்.
வெண்ணெய்: வறண்ட மற்றும் சிக்கு முடியை திறம்பட நிர்வகிக்க உதவுவதில் வெண்ணெய் சிறப்பாக செயல்படும் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. ஒரு பாத்திரத்தில் சிறிது உருகிய வெண்ணெயை எடுத்து, கூந்தலில் கீழ் நோக்கி தடவவும். 20 அல்லது 30 நிமிடங்களுக்குப் பிறகு நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்புவுடன் தலைமுடியை வாஷ் செய்து விடுங்கள்.
வேப்பிலை: வேப்பிலைகளில் ஆன்டிபாக்டீரியல்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகின்றன. எனவே முடி வளர்ச்சிக்கு உதவி மற்றும் முடி வறண்டு போகாமலே தடுக்கின்றன. ஒரு கப் சூடான தேங்காய் எண்ணெயில் சில வேப்பிலைகள் அல்லது கறிவேப்பிலையை சேர்த்து ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பின் அந்த எண்ணெயை தலைக்கு தடவி சிறிது நேரம் ஊறவைத்து விட்டு வழக்கமான ஷாம்புவை பயன்படுத்துங்கள்.
வாழைப்பழங்கள் : வாழைப்பழத்தில் உள்ள சிலிக்கா முடி இழைகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கிறது. மேலும் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. நீங்கள் தேவைப்பட்டால் கற்றாழையுடன் வாழைப்பழத்தை கலந்து கூட நேரடியாக உங்கள் தலைமுடியில் தடவலாம். 20 நிமிடங்கள் வரை ஊற வைத்து பின் உங்கள் வழக்கமான ஷாம்பு பயன்படுத்தி வாஷ் செய்யலாம்.
வெந்தயம்: முடி வளர்ச்சிக்குத் தேவையான புரதம் மற்றும் இரும்புச்சத்து வெந்தயத்தில் நிறைந்துள்ளது. இது பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகளையும் கொண்டுள்ளது. வெந்தயத்தை தண்ணீரில் அல்லது நீங்கள் விரும்பும் ஆயிலில் இரவு முழுவதும் ஊற வைக்கலாம். தண்ணீரில் ஊற வைத்திருந்தால் தலை முடியில் அதை ஸ்ப்ரே செய்யலாம். ஆயில் என்றால் தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து ஷாம்பு போட்டு குளித்து விடுங்கள்.
முட்டைகள்: வறண்ட முடியை நிர்வகிக்க மற்றும் நீரேற்றத்தை மீட்டெடுக்க முட்டை உதவுகிறது. முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் பயன்படுத்தலாம் அல்லது முழு முட்டையையும் முடியில் தடவலாம். 10 நிமிடங்களுக்கு மேல் ஊற வைக்க வேண்டாம், சில நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் தலைமுடியை வழக்கமான ஷாம்புவுடன் வாஷ் செய்யலாம்.