Home Remedies for Wart : சருமத்தில் ஒவ்வாமை மற்றும் தொற்று என வந்து போவது சகஜம். இதை நாம் சரியான பராமரிப்பின் மூலம் மட்டுமே தவிர்க்க முடியும். அந்த வகையில் பலருக்கும் பெரிய பிரச்சனையாக இருப்பது மருக்கள். இதனால் உடலி எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் தோற்றத்தின் அழகை கெடுப்பதாக இருக்கும். மருக்கள் ஏற்படுவதற்கு மிகப்பெரிய காரணம் மனித பாப்பிலோமா வைரஸ் ஆகும். இது சருமத்தை வெகுவாக பாதிப்பதாலேயே மருக்கள் உருவாகின்றன.
ஆனால் பலரும் செய்யும் அலட்சியத்தால், அவை மற்ற இடங்களிலும் பரவத் தொடங்கும். மருக்களை குணப்படுத்த பெரிதாக எதுவும் சிகிச்சைகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதோடு சில காஸ்மெடிக் கிளீனிக்குகளிலும் இதற்கான எளிமையான சிகிச்சை முறைகளும் உள்ளன. கருவிகளை பயன்படுத்தி நொடியில் அவற்றை நீக்கிவிடுவார்கள். இருப்பினும் சில சமையலறை பொருட்களை மட்டும் பயன்படுத்தி மருக்களை நீக்க முடியும். அவை என்னென்ன பார்க்கலாம்.
ஆப்பிள் வினிகர் : ஹெல்த்லைனின் கூற்றுப்படி, ஆப்பிள் சைடர் வினிகரில் இயற்கையான அமிலங்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது HPV ஐ எதிர்த்துப் போராட உதவுகிறது. ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்து, அதே அளவு தண்ணீரை கலக்கவும். வினிகர் மற்றும் தண்ணீரின் கலவையை ஒரு பருத்தி உருண்டையின் உதவியுடன் மருக்கள் மீது தடவி, அதை ஒரு கட்டு கொண்டு மூடவும்.
பூண்டு : மருக்களுக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்து. பூண்டில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மருக்களை போக்க உதவும். ஒரு கிராம்பு மற்றும் பூண்டை அரைத்து சிறிதளவு சாற்றை மருக்கள் மீது தடவி மூடி வைக்கவும். இதை மூன்று முதல் நான்கு வாரங்கள் தொடர்ந்து செய்யுங்கள். சில நாட்களில் வித்தியாசத்தைக் காணத் தொடங்கலாம்.