இந்த நாட்களில் கூந்தல் தொடர்பான சிகிச்சைகளுக்கு பஞ்சமில்லை. எனவே, நம்மில் பலர் தலைமுடி பாணியை மாற்றியமைக்கவும், புதிய தோற்றத்தைத் பெற உதவும் சிகிச்சைகளை ஆராயத் தொடங்கியுள்ளனர். அதன்படி, சமீபத்தில் அதிகம் பேசப்படும் முடி சிகிச்சைகளில் ஒன்று கெரட்டின். கெரட்டின் ஒரு புரதமாகும். இது முடியை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் முடி உடைவதைத் தடுக்கிறது.
கெரட்டின் சிகிச்சைக்காக நீங்கள் சலூனுக்கு செல்லும்போது, உங்கள் தலைமுடியில் ஒரு சொலுஷன் பயன்படுத்தப்படுகிறது. அதுவே உங்கள் தலைமுடியை மென்மையாகவும் சில்கியாகவும் மாற்றுவதாகக் கூறப்படுகிறது. சுருட்டை மற்றும் மந்தமான கூந்தல் அமைப்பை கொண்ட பெண்களில் பெரும்பான்மையானவர்கள் இப்பொது கெரட்டின் சிகிச்சையைத் தேர்வு செய்து வருகின்றனர். ஏனெனில் இது அவர்களின் தலைமுடியை நேராக்குவதோடு, அவர்களின் தோற்றங்களை மிகவும் அழகாக மாற்றுவதாக நம்புகிறார்கள்.
1. ஃபார்மால்டிஹைட்டின் பயன்பாடு (Use Of Formaldehyde) : ஏற்கனவே பகிர்ந்தது போல, இந்த சிகிச்சையில் ஒரு சொலுஷன் பயன்படுத்தப்படுகிறது. அந்த சொலுஷன் ஃபார்மால்டிஹைட் என்ற ரசாயனத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இது தலைமுடியை சேதப்படுத்தும் ஒரு மூலப்பொருள் என்றும் நம்பப்படுகிறது. இதனால் இந்த சொலுஷன் தலைமுடிக்கு மட்டுமல்ல, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு ஆய்வின்படி, சலூன் போன்ற ஒரு மூடப்பட்ட இடத்தில் இந்த ரசாயனத்தைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இது தொண்டை புண் அல்லது கண்களில் அரிப்பு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இது தற்காலிக சிகிச்சையே (Temporary Treatment) : துரதிர்ஷ்டவசமாக, கெராடின் சிகிச்சை உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்காது. இது உங்கள் தலைமுடியை நேராக்கும் ஒரு தற்காலிக சிகிச்சையாகும். காலப்போக்கில், நேரான மற்றும் பிரகாசமான கூந்தல் மறைந்து உங்கள் அசல் அமைப்பு மற்றும் வடிவத்திற்கே மாறிவிடும்.
3. கெமிக்கல்ஸ் முடியின் வேரை சேதப்படுத்தும்: (Harmful Chemicals Internally Damage Hair) : மற்ற கூந்தல் சிகிச்சைகளை போலவே, இதுவும் நீண்ட காலத்திற்கு உங்கள் தலைமுடியை சேதப்படுத்தும் பல இரசாயனங்கள் உள்ளடக்கியது. ஆரம்பத்தில், நீங்கள் ஒரு முழுமையான மாற்றத்தைக் காணலாம். ஆனால் காலப்போக்கில் அதன் பக்க விளைவுகளை நீங்கள் காணத் தொடங்குவீர்கள். சிகிச்சைக்கு முன்னர் உங்கள் தலைமுடி இருந்ததை விட மிகவும் பலவீனமாக மாறும். ஏனெனில் அந்த இரசாயனங்கள் உங்கள் முடியின் வேர்களை சேதப்படுத்த ஆரம்பித்து அவற்றை பலவீனப்படுத்துகின்றன.
5. விலையுயர்ந்த சிகிச்சை: (Expensive And Time-Consuming Treatment) : கெரட்டின் சிகிச்சை மிகவும் விலை உயர்ந்தது. இதன் விலை முற்றிலும் உங்கள் தலைமுடி அமைப்பை பொறுத்தது என்றாலும், சாதாரணமாக ரூ.4000 முதல் ரூ.10000 வரை செலவாகும். ஒருமுறை சிகிச்சை செய்து கொள்வதால் அதன் பயன் சுமார் 4 முதல் 6 மாதங்கள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் உங்கள் தலைமுடியை நீங்கள் எவ்வாறு கவனித்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அதன் காலம் அமையும்.
இந்த சிகிச்சையானது விலை உயர்ந்தது மட்டுமல்ல, நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயலாகும். சிகிச்சை செயல்முறை முடிவதற்கு பொதுவாக 3 முதல் 6 மணி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் கெராடின் சிகிச்சையை பெறக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.