லேடி சூப்பர் ஸ்டார் என்று கெத்தாக அழைக்கப்படும் நயன்தாரா பல ஆண்டுகளாக திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் சூப்பராக இருக்காங்க என்று கட்டாயமாக தோன்றும். சமீபத்தில் டிரெண்டாகி உள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கூடுதல் அழகுடன் மிளிர்கிறார் நயன்! இவரின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா?
CTM ரொட்டீன்: எவ்வளவு பிசியான நாளாக இருந்தாலும், ஷூட்டிங் இல்லையென்றாலும் சரி, இந்த பழக்கத்தை நயன்தாரா தொடர்ந்து பின்பற்றி வருகிறார். CTM என்பது கிளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்ச்சரைசிங் என்று மூன்று விதமான சருமப் பராமரிப்பு வழிமுறைகளைக் குறிக்கின்றன.கிளென்சிங் செய்வது சருமத்தில் உள்ள மாசு, அழுக்குகளை நீக்கி, சுத்தமாக்கும். டோனிங் சருமத்தை மென்மையாக்கி, பொலிவாக்கும். மாயிஸ்ச்சரைசிங் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை குறையாமல் பார்த்துக்கொள்ளும்.