ஜப்பானியர்கள் மற்ற பகுதிகளில் உள்ள பெண்களிடமிருந்து தனித்து தெரிவதற்கு பல நூற்றாண்டுகளாக அவர்கள் பின்பற்றி வரும் பண்டைய கால பாரம்பரிய பழக்கவழக்கங்களே காரணமாகும். ஜப்பானிய பெண்கள் பெரும்பாலும் தங்களது சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வெறும் முகப்பூச்சுகளை பூசி தங்களை அழகுபடுத்திக் கொள்வதை விட, இயற்கையான பாரம்பரிய முறையில் தங்களது சரும பாதுகாப்பு மேற்கொள்வது ஆரோக்கியமானது என்பது அவர்களது நம்பிக்கையாகும்.
ஆயில் க்ளன்சிங் : தற்போது அதிக அளவில் பிரபலம் அடைந்து வரும் ஆயில் க்ளன்சிங் முறையானது ஜப்பானியர்களின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றாகும். ஜப்பானியர்கள் பெரும்பாலும் தங்களது முகத்தை அழகாக வைத்திருக்க சரும பாதுகாப்பிற்காகவும் இந்த எண்ணையை பயன்படுத்தி முகத்தில் உள்ள நச்சுக்களை நீக்கும் முறையை கடைப்பிடித்து வந்துள்ளனர். இவ்வாறு இரு முறை எண்ணையை பயன்படுத்தி ஆயில் க்ளன்சிங் செய்யும் போது முகத்தில் உள்ள முகப்பூச்சுகளை முழுவதுமாக நீக்குவதோடு சருமத்தில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்ற உதவுகிறது.
பாரம்பரிய குளியல் முறை : ஜப்பானியர்கள் குளிப்பதற்கென்று ஒரு தனி வழி முறையை பின்பற்றி வந்துள்ளனர். அவர்கள் குளிப்பதை வெறும் உடலை சுத்தம் செய்யும் ஒரு செயல்முறையாக மட்டும் பார்க்காமல் அதை உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும் ஒரு சிகிச்சை முறையாக பின்பற்றி வந்துள்ளனர். நமது உள்ளத்தையும் உடலையும் ரிலாக்ஸ் ஆகவும் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதற்கு அவர்களது பாரம்பரிய குளியல் முறை உதவுவதாக நம்புகின்றனர்.
சரிவிகித உணவு கட்டுப்பாடு : நமது உடலின் ஆரோக்கியமானது நமது சருமத்தின் மூலம் வெளிப்படும் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கையாகும். நமது உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பதற்கு சரியான உணவு பழக்க வழக்கத்தை கடைபிடிப்பது உடல் மற்றும் உள்ளத்தை புத்துணர்ச்சியோடு வைத்திருப்பது முக்கியமானதாகும். முக்கியமாக உணவில் அதிக அக்கறை செலுத்தும் ஜப்பானியர்கள் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சரிவிகித உணவு பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். இதன் மூலம் உடலில் நச்சுக்கள் சுரப்பது கட்டுப்படுத்தப்பட்டு அழற்சி தன்மை ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
அரிசி உணவு : ஜப்பானியர்கள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் உணவு வகைகளில் அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அரிசியை உட்கொண்டாலே போதும் என்பது அவர்களது நம்பிக்கை. தங்களது சரும பராமரிப்பு தலை முடியை பராமரிப்பது போன்ற பல்வேறு விஷயங்களுக்கும் சூரிய ஒளியில் வைக்கப்பட்ட அரிசியை அதிகம் பயன்படுத்துகின்றனர். உடல் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு அழற்சி தன்மைக்கு எதிராக செயல்படுவதற்கும் இது உதவுகிறது என்பது அவர்களது நம்பிக்கை.