முக அழகைப் பராமரிக்க ஏகப்பட்ட ஸ்கின் கேர் பொருட்கள் வந்துவிட்டன. இருப்பினும் பாரம்பரிய அழகுக் குறிப்புகளுக்குத்தான் முதல் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதனால்தான் வெளிநாட்டு காஸ்மெடிக்ஸ் நிறுவனங்கள் கூட பாரம்பரிய அழகுக் குறிப்புகள் அடங்கிய பொருட்களை பயன்படுத்தி காஸ்மெடிக்ஸ் தயாரிக்கின்றனர். அப்படி நீங்கள் பயன்படுத்தும் காஸ்மெடிக்ஸ் பொருட்கள் ஒர்க் அவுட் ஆகின்றனவா..? தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்...
காஸ்மெடிக்ஸ் பொருட்களை வாங்கும்முன் அதன் பின்குறிப்பை படிப்பது அவசியம். ஏனெனில் சில காஸ்மெடிக்ஸ் பொருட்கள் நிர்ணயித்த அளவை விட அதிகமாக கெமிக்கல்களை கலக்கக் கூடும். எனவே ஒரு பிராண்டை தேர்வு செய்யும் முன் கெமிக்கல் அளவு, விலங்குகள் சோதனை செய்யாமை போன்ற விஷயங்கள் சரியாக உள்ளனவா என்பதை பார்த்து வாங்குங்கள்.
உடனடி பலன்கள் நீண்ட நாட்களுக்கு தீர்வு அல்ல : சில நேரங்களில் வாங்கும் காஸ்மெடிக்ஸ் டெமோ பார்க்கும்போது பளபளப்பாக தெரியலாம். வீட்டில் பயன்படுத்தும்போதும் நல்ல ரிசல்ட் கொடுக்கலாம். ஆனால் அவ்வாறு அவை பலன் கொடுக்கிறது எனில் விரைவில் சருமத்தை பாதிக்கும் ஆபத்தையும் சந்திக்க நேரிடும். பொதுவாக எந்த ஒரு காஸ்மெடிக்ஸ் பொருளாக இருந்தாலும் ரிசல்ட் தெரிய 28 நாட்கள் ஆகும் என டெர்மடாலஜிஸ்ட்கள் கூறுகின்றனர். எனவே அவை அதிக கெமிக்கல் கலப்படத்தால் அந்த போலி பொலிவை தரலாம்.