அழகூட்டும் தாடி அரிப்பையும் ஏற்படுத்துகிறதா? என்னதான், தாடி அழகானதாக இருந்தாலும் பல சமயங்களில் அது உங்களுக்கு எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தக் கூடும். குறிப்பாக, வெயில் காலங்களில் வியர்வை வியர்த்து தாடியில் சேரும்போது, அங்கு கிருமித்தொற்று ஏற்பட்டு அரிப்பு வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இது பொதுவான காரணம் மட்டுமே. ஆனால், இது தவிர வேறு பல காரணங்களும் இருக்கின்றன.
சருமம் மற்றும் தாடி பராமரிப்பை சரிவர செய்யாமல் இருப்பதும் கூட அரிப்பை ஏற்படுத்தும். முகத்தை சோப் வைத்து முறையாக சுத்தம் செய்வது அவசியம் என்றாலும் கூட, அடிக்கடி சோப் பயன்படுத்தினால் அதன் அலர்ஜி காரணமாகவும் அரிப்பு ஏற்படக் கூடும். சில சமயம், முகத்தில் ஏற்படும் பங்கஸ் அல்லது பாக்டீரியா தொற்று காரணமாகவும் முகத்தில் அரிப்பு ஏற்படும்.
அரிப்பை தடுப்பது எப்படி? அரிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால் முகம் மற்றும் தாடியில் எண்ணெய் பசை, அழுக்கு மற்றும் பாக்டீரியா ஆகியவை சேர விடாமல் தடுக்க வேண்டும். தினந்தோறும் ஒருமுறையாவது குளிக்க வேண்டும். நீங்கள் எப்போதுமே தாடி வைத்திருப்பவர் என்றால் வெந்நீர் வைத்து முகத்தை தினசரி கழுவ வேண்டும். முகம் அல்லது தாடி பராமரிப்புக்கு என பிரத்யேகமாக விற்கும் வாஷ் ஜெல்களை வாங்கியும் பயன்படுத்தலாம்.
மருத்துவ சிகிச்சை : தாடியில் இடைவிடாத அரிப்பு, நாள்பட்ட அரிப்பு போன்ற பிரச்சினைகள் இருந்தால் சரும நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும். உங்கள் சருமத்திற்கு ஏற்ற க்ரீம், லோஷன் போன்றவற்றை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். குறிப்பாக, பாக்டீரியா மற்றும் பங்கஸ் தொற்று போன்றவற்றை தடுக்கும் மருந்துகளை கொடுப்பார்கள்.