சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுவது என்பது பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று. அதற்காக நாம் செய்யாத காரியங்கள் இல்லை. ஆனாலும், அதற்கான நிரந்தர தீர்வு நமக்கு கிடைப்பதில்லை. தேவையற்ற முடிகள் என்றால், பெண்களின் கை - கால்கள், முகத்தில் உள்ள முடிகளை தேவையற்ற முடிகள் என அழைக்கிறோம். இந்த தேவையற்ற முடிகளை நிரந்தரமாக அகற்ற உதவும் சரும ஃபேஸ் பேக்குகள் சிலவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பப்பாளியுடன் மஞ்சள் : நன்கு பழுத்த பப்பாளி பழ திப்பையுடன் (2 ஸ்பூன்) 1/2 ஸ்பூன் மஞ்சள் பொடி மற்றும் 5 ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்து, தேவையற்ற முடிகளின் மீது தடவி 20 நிமிடங்களுக்கு உலர விடவும். பின் முடி வளரும் திசைக்கு எதிர் திசையில் இருந்து இந்த பேக்கினை தேய்த்து எடுக்கவும்.
முட்டை மாஸ்க் : 2 ஸ்பூன் சர்க்கரையுடன் ஒரு ஸ்பூன் சோள மாவு மற்றும் ஒரு முட்டை கருவை சேர்த்து பேஸ்ட் போல் கரைத்து, தேவையற்ற முடிகளின் மீது தடவி 15 - 20 நிமிடங்களுக்கு உலர வைக்கவும். பின்னர் தண்ணீர் பயன்படுத்தாமல் இந்த பேக்கினை முழுவதுமாக அகற்றவும். வாரம் 2 முறை இவ்வாறு செய்ய நல்ல மாற்றம் தெரியும்.