சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடமிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க ஒரு நல்ல சன்ஸ்கிரீன் எப்போதும் அவசியம். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெளியில் சென்று விட்டு வந்தாலே சூரிய கதிர்கள் மற்றும் வியர்வை காரணமாக சருமம் கருமையடைந்து விடும். உங்கள் உடல் சூரியனால் உமிழும் புற ஊதா கதிர்களிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கும்போது சரும பாதிப்பு ஏற்படுகிறது. புற ஊதா கதிர்வீச்சை உறிஞ்சுவதற்கு உங்கள் தோல் அதிக மெலனின் வெளியிடுகிறது. இது உங்கள் சருமம் கருமையாக்குகிறது. அதன் மூலம் உங்கள் சருமத்தின் நிறம் சீரற்றதாகிவிடும். இது சன் டேன் என அழைக்கப்படுகிறது. இதனை சரி செய்ய எளிதான வீட்டு வைத்தியங்களை நீங்கள் முயற்சி செய்யலாம்.
தக்காளி : தக்காளி சருமத்திற்கு அழகை தருகிறது. தக்காளி பேஸ்ட் மற்றும் கற்றாழை சாற்றில் சம அளவு கலந்து பேஸ்ட் செய்து உங்கள் குறைந்தது 30 நிமிடங்களாவது உங்கள் தோலில் இருக்கும் வகையில் அப்ளை செய்யுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால் ஓரிரு நாட்களில் நீங்கள் மாற்றத்தைக் காண்பீர்கள். சண் டேனை மட்டுமின்றி, கரும்புள்ளிகளை சரி செய்கிறது.