Mehndi Remove Tips : பண்டிகை அல்லது வீட்டு விசேஷங்களுக்காக பெண்கள் கைகளில் மெஹந்தி வைப்பது வழக்கம். சில காரணங்களுக்காக அதை அழிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் எனில் இந்த டிப்ஸ் உங்களுக்காக..!
2/ 8
ஆன்டிபாக்டீரியல் தன்மை கொண்ட சோப்பு கொண்டு கைகளை அடிக்கடி கழுவி வர சில நாட்களிலேயே மருதாணி மறைந்துவிடும்.
3/ 8
கைகளில் உள்ள கறைகளை நீக்க உப்பு சிறந்த சுத்தப்படுத்தி. எனவே கல் உப்பை தண்ணீரில் கரைத்து அதில் கைகளை 15 நிமிடங்கள் ஊற வைத்து பின் தேய்க்க கறை நீங்கும். கறை போகும் வரை தினமும் இப்படி செய்யுங்கள்.
4/ 8
முகத்திற்கு அப்ளை செய்யும் ஸ்கிரப்பர் கொண்டு நன்கு தேய்க்க கறை நீங்கும். ஸ்கிரப் செய்யும் முன் வெதுவெதுப்பான நீரில் கைகளை 10 நிமிடங்கள் ஊற வைத்து பின் ஸ்கிரப் செய்யுங்கள்.
5/ 8
ஆலிவ் எண்ணெயில் கல் உப்பு கரைத்து எண்ணெயை கைகளில் பஞ்சு தொட்டு தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவி பின் ஸ்கிரப் க்ரீம் கொண்டு கைகளை கழுவ மெஹந்தி கரை நீங்கிவிடும்.
6/ 8
எலுமிச்சை சாறும் மெஹந்தி கரையை நீக்கும். எனவே எலுமிச்சை சாறை கைகளில் நேரடியாக அப்ளை செய்யலாம் அல்லது தண்ணீரில் பிழிந்து அதில் கைகளை 20 நிமிடங்கள் வைத்து கழுவினாலே போய்விடும்.
7/ 8
பேக்கிங் சோடாவுடன் அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து பேஸ்ட் போல் கலந்து மெஹந்தி உள்ள இடங்களில் பேக் போல் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து சோப்பு கொண்டு கழுவவும். பின் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவுங்கள்.
8/ 8
நகங்களில் படிந்திருக்கும் மெஹந்தி கரையை நீக்க நெயில் பாலிஷ் ரிமூவர் போதுமானது.