பெண்களுக்கும் முகத்தில் ரோமங்கள் வளர்வது சகஜம். என்ன.. ஆண்களுக்கு தடித்த ரோமங்களாக கருகருவென வளரும். பெண்களுக்கு தலைமுடி போல் மென்மையாக அவர்களின் முக நிறத்திற்கு ஏற்ப வளரும். இருப்பினும் முகத்தில் முடி வளர்வதை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை என்ற காரணத்திற்காகத்தான் முன்னோர்கள் தொட்டு பாரம்பரிய வழக்கமாக மஞ்சள் தடவிக் குளிக்கின்றனர்.
கடலை மாவு : கால் கப் கடலை மாவு, கால் கப் தேன், ஒரு கப் தண்ணீர் மற்றும் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு நான்கையும் ஒன்றாக பேஸ்ட் போல் கலந்து முகத்தில் சீராகத் தடவுங்கள். அது காய்ந்து உதிரும் வரைக் காத்திருந்து வெது வெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். இப்படி மாதம் இரண்டு முறை செய்தாலே போதும். நல்ல பலன் கிடைக்கும்.