மழைக்காலத்தில் உடல் விரைவில் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். இதனால் சருமத்தை பராமரிப்பதே சவால்தான். குறிப்பாக ஏற்கெனவே வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் கூடுதல் கவனத்துடன் பராமரிப்பது அவசியம். எப்படி என்று பார்கலாம்.
2/ 6
தண்ணீர் அருந்துங்கள் : மழைக்காலத்தில் உடலில் நீர் விரைவில் வற்றிவிடும். இதைத் தடுக்க அடிக்கடி நீர் அருந்துங்கள். குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் அருந்துவது நல்லது. இதனால் சரும வறட்சியையும் தடுக்கலாம்.
3/ 6
உணவில் கவனம் : கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். மாய்ஸ்சரைஸராக செயல்பட்டு வறண்ட சருமத்தை மீட்க உதவும்.
4/ 6
சுடு தண்ணீரில் குளிப்பதைத் தவிர்க்கவும் : உங்களுக்கு வறண்ட சருமம் எனில் சுடு தண்ணீரில் குளிப்பதை தவிருங்கள். வெந்நீர் மேலும் உங்கள் சருமத்தை வறட்சியடைய வைக்கும். சருமத்தை பலவீனமாக்கும்.
5/ 6
கெமிக்கல்களை தவிருங்கள் : மழைக் காலங்களில் கெமிக்கல் நிறைந்த சருமப் பாதுகாப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதை விட இயற்கையான வீட்டுக் குறிப்புகளைப் பின்பற்றுங்கள். குறிப்பாக கற்றாழை ஜெல்லை பயன்படுத்தினாலே போதுமானது.
6/ 6
மாய்ஸ்சரைஸர் : வறண்ட சருமத்தினர் கட்டாயம் மாய்ஸ்சரைஸர் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் சருமம் எளிதில் வறட்சியடையாமல் ஈரப்பதம் தக்க வைக்கப்படும்.