தற்போதையை இளைஞர்களிடம் காணப்படும் தலையாய பிரச்சினைகளில் ஒன்று முகப்பரு மற்றும் முடி உதிர்வு. மன அழுத்தம், சரியான ஓய்வு இன்மை, உடல் சூடு, காலநிலை மாற்றம், வெயில், சத்துக்குறைவு என இதற்கு மருத்துவ ரீதியாக பல காரங்கள் கூறப்படுகிறது. ஒரு பாதிப்பு வந்த பின்னர் அதை எப்படி சரிசெய்வது என யோசிப்பதை விட. அதை வராமல் தடுப்பது எப்படி என்பதை தான் நாம் பார்க்க வேண்டும். அந்தவகையில், முகத்தில் தோன்றும் பருக்களை வராமல் தடுக்கும் ஒரு சில வழிகள் பற்றி இங்கு காணலாம்.