முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » மேக்கப் போடுவதற்கு முன் உங்கள் சருமத்தை எப்படி தயார் செய்வது.?

மேக்கப் போடுவதற்கு முன் உங்கள் சருமத்தை எப்படி தயார் செய்வது.?

Makeup Tips | இந்த பதிவில், மேக்கப் போடுவதற்கு முன் உங்களின் சருமத்திற்கு செய்ய வேண்டிய தாயரிப்புகளை பற்றி இனி தெரிந்து கொள்ளலாம்.

  • 18

    மேக்கப் போடுவதற்கு முன் உங்கள் சருமத்தை எப்படி தயார் செய்வது.?

    பெரும்பாலும் மேக்கப் பற்றிய தெளிவான புரிதல் அதிகப்படியான மக்களுக்கு இருப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை மேக்கப் குறித்து வைத்துள்ளனர் என்றே சொல்லலாம். எனவே, நிபுணர்கள் இது குறித்து சில தெளிவான ஆலோசனைகளையே முன் வைக்கின்றனர். அதிலும் குறிப்பாக எந்த வகையான மேக்கப் போட வேண்டும், எது சருமத்திற்கு சிறந்த ஒன்று, மேக்கப் போடுவதற்கு முன் சருமத்தை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை குறித்து ஆலோசனை தந்துள்ளனர். அந்த வகையில் இந்த பதிவில், மேக்கப் போடுவதற்கு முன் உங்களின் சருமத்திற்கு செய்ய வேண்டிய தாயரிப்புகளை பற்றி இனி தெரிந்து கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 28

    மேக்கப் போடுவதற்கு முன் உங்கள் சருமத்தை எப்படி தயார் செய்வது.?

    கிளென்சிங்: மேக்கப் போடுவதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியது கிளென்சிங் தான். உங்கள் தோல் வகையுடன் நன்றாக பொருந்தும் கிளென்சிங் புராடக்ட்டை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். இது உங்கள் சருமத்தின் அனைத்து அசுத்தங்களையும் சுத்தப்படுத்தும். மேலும் இந்த செயல்முறையை மெதுவாக செய்தல் நல்லது. பிறகு உங்கள் சருமத்தை சிறிது நேரம் உலர வைக்கவும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 38

    மேக்கப் போடுவதற்கு முன் உங்கள் சருமத்தை எப்படி தயார் செய்வது.?

    எக்ஸ்போலியேஷன்: இறந்த சரும செல்களை அகற்ற எக்ஸ்ஃபோலியேஷன் அவசியம். மேக்கப்-ஆனது வறண்ட சருமத் திட்டுகளை மட்டுமே வெளிப்படுத்துகிறது, எனவே மேக்கப்பிற்கு முன் எக்ஸ்ஃபோலியேஷன் உங்களுக்கு மென்மையான மேற்பரப்பைக் கொடுத்து மேக்கப்பை எளிதாக பயன்படுத்துவதற்கும் உதவும். குறிப்பாக நீங்கள் மேட் லிப்ஸ்டிக் பயன்படுத்தினால், உங்கள் உதடுகளையும் எக்ஸ்ஃபோலியேட் செய்ய மறக்காதீர்கள்.

    MORE
    GALLERIES

  • 48

    மேக்கப் போடுவதற்கு முன் உங்கள் சருமத்தை எப்படி தயார் செய்வது.?

    டோனர்: டோனிங் முறை என்பது துளைகளை சுருக்கி சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. மேக்கப் தோலின் ஆழமான அடுக்கில் நுழைவதற்கு இது ஒரு தடையாகவும் செயல்படுகிறது. டோனிங்கிற்கு குளிர்ந்த நீரையும் நீங்கள் பயன்படுத்தலாம். மேலும், இது சருமத்துளைகளை சுருக்கி, மேக்கப்பை மிருதுவாகப் பயன்படுத்துவதற்கு பெரிதும் உதவுகிறது. சிறந்த பிராண்ட் கொண்ட டோனர் வாங்குவதும் அவசியம்.

    MORE
    GALLERIES

  • 58

    மேக்கப் போடுவதற்கு முன் உங்கள் சருமத்தை எப்படி தயார் செய்வது.?

    சீரம்: சருமப் பராமரிப்பு சீரம்கள் மேக்கப்பிற்கு ஒரு சிறந்த வழியாகும். ஏனெனில் இது சருமத்திற்கு சிறந்த ப்ரைமராக செயல்பட உதவுகிறது. சீரம் சருமத்தை நன்கு ஹைட்ரேட் செய்து, நீண்ட நேரம் நீரேற்றமாக வைத்திருக்கும். மேலும் இது உங்கள் சருமத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்திருக்க வழி செய்கிறது.

    MORE
    GALLERIES

  • 68

    மேக்கப் போடுவதற்கு முன் உங்கள் சருமத்தை எப்படி தயார் செய்வது.?

    மாய்ஸ்சரைசர்: உங்கள் தோல் வகையைப் பொருட்படுத்தாமல், மேக்அப் பயன்பாட்டிற்கு உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். இது உங்கள் தோலின் மேல் மேக்கப் அழகாக இருப்பதையும், நாள் முழுவதும் வசதியாக இருப்பதையும் உறுதிசெய்கிறது. அதே போன்று, உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தாலும் இதை பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த செயல்முறையாகும்.

    MORE
    GALLERIES

  • 78

    மேக்கப் போடுவதற்கு முன் உங்கள் சருமத்தை எப்படி தயார் செய்வது.?

    SPF அவசியம்: சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிட வேண்டி இருந்தால், சன்ஸ்கிரீன் லோஷன் அல்லது கிரீம் பயன்படுத்துவதற்கு மறக்காதீர்கள். ஒருவேளை இதை பயன்படுத்திய பிறகு உங்கள் சருமம் க்ரீஸாக உணர்ந்தால், அதிகப் படியான எண்ணெயை சரிசெய்ய டிஷு பேப்பரை பயன்படுத்தவும்.

    MORE
    GALLERIES

  • 88

    மேக்கப் போடுவதற்கு முன் உங்கள் சருமத்தை எப்படி தயார் செய்வது.?

    பிரைமர்: ப்ரைமர் உங்களின் மேக்கப்பை நீண்ட நேரம் தக்க வைக்க உதவுகிறது. ப்ரைமர்கள் உங்கள் மேக்கப் பயன்பாட்டிற்கு ஒரு மென்மையான தளத்தை உருவாக்குவதோடு, உங்கள் மேக்கப்பையும் அழகாக எடுத்துக்காட்டுகிறது. ஒரு நல்ல தரமான ப்ரைமருக்கு, துளைகளை மங்கச் செய்து, மேக்கப்பிற்காக சருமத்தை தயார் செய்யவும், சருமத்தை நன்கு நீரேற்றமாக வைத்திருக்க கூடிய சக்தி உள்ளது

    MORE
    GALLERIES