முகத்தை எப்போதும் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பதுண்டு. இதற்காக மாதத்திற்கு ஒரு முறை அழகு நிலையங்களுக்குச் செல்வது தொடங்கி முகத்திற்கு பல கிரீம்கள் உபயோகித்தும் வருகின்றன. சில நேரங்களில் முகத்தைப் பராமரிக்க உதவும் என நினைக்கும் சில அழகு சாதனப் பொருள்களால் நமக்கு அலர்ஜி ஏற்படும். எனவே இது போன்ற சூழலைத் தவிர்க்கவும், ரோஜா இதழ்களைப் போன்று முக பளப்பாக மற்றும் மென்மையாக இருப்பதற்கு ரேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம் என்கின்றனர் அழகு கலை நிபுணர்கள். பொதுவாக ரோஜா இதழ்களில் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் மற்றும் வைட்டமின் சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் சருமப் பிரச்சனைக்குத் தீர்வாக அமைவதோடு முக பருக்களையும் எதிர்த்துப் போராடுகிறது.
தயிர் மற்றும் ரோஸ் பேக்: தயிரில் உள்ள லாக்டிக் அமிலங்கள் இயற்கையாகவே முகத்திற்கு பிரகாசம் தரும் பண்புகளைக் கொண்டதால், சருமத்திற்குப் பொலிவை நிச்சயம் தரும் தன்மையைக் கொண்டுள்ளது. எனவே ரேஸ் பேக் செய்யும் போது தயிரை தாராளமாகப் பயன்படுத்தலாம். செய்முறை: முதலில் ரோஜா இதழ்களை தனியாக எடுத்து மிக்ஸியில் அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த பேஸ்டுடன் தேன், ஒரு தேக்கரண்டி தயிர் மற்றும் இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். இப்போது உங்களது பேஸ் பேக் ரெடியாகிவிட்டது. வழக்கம் போல சருமத்தில் உபயோகித்து முக பளபளப்பை பெறமுடியும்.
பச்சை பால் மற்றும் ரோஸ் ஃபேஸ் பேக் : ரோஜா இதழ்கள், பால் மற்றும் உளுத்தம் பருப்பு போன்றவற்றைத் தயார் செய்யப்படும் இந்த பேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, பளபளப்பான சருமத்தைப் பெற உதவுகிறது. செய்முறை: முதலில் ரோஜா இதழ்களை நன்றாக அரைத்து பேஸ்ட் செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் சிறிதளவு உளுந்தம்பருப்பு மற்றும் பச்சைப் பால் சேர்த்து நன்றாக மீண்டும் அரைத்து பேஸ்ட் போல் செய்ய வேண்டும். இதனை உங்களது முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சுமார் 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். இது முகத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கிறது.
தேன் மற்றும் ரோஜா ஃபேஸ் பேக்: தேனில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்பட ஏராளமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால், சரும செல்களுக்கு ஊட்டச்சத்தை வழங்குவதன் மூலம் சருமத்தில் ஆழமாக ஊடுருவி நல்ல பலனை அளிக்கிறது. எனவே தேன் கலந்த ரோஜா பேஸ் பேக்கைப் பயன்படுத்த வேண்டும் நினைப்பவர்கள் முதலில், ரோஜா இதழ்களை சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும். பின்னர் நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு அதனுடன் 3 தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பேஸ் பேக் தயாரானதும் முகத்தில் அப்ளை செய்வதோடு, லேசாக மசாஜ் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவும் போது உங்களுக்கு மிகவும் புத்துணர்ச்சியைத் தரக்கூடும்.