ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » அதிக விலை கொடுத்து வாங்கும் மேக்அப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த டிப்ஸ்

அதிக விலை கொடுத்து வாங்கும் மேக்அப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த டிப்ஸ்

அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் முடி சூட்டா ராணியாக வலம் வரும் ஷானாஸ் ஹுசைன் மேக்கப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு உபயோகிக்கும் வகையில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பகிர்ந்த டிப்ஸ் இதோ. 

 • 18

  அதிக விலை கொடுத்து வாங்கும் மேக்அப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த டிப்ஸ்

  சின்ன சின்னதாக டச்சப் செய்து கொள்வது முதல் ஆளையே மாற்றும் போர்ட்ரைட் மேக்கப் வரை பல விதமாக மேக்கப் செய்து கொள்வதற்கு பல்வேறு விதமான மேக்கப் சாதனங்கள் உள்ளன. மேக்-அப் செய்து கொள்வது உங்கள் தோற்றத்தை மேம்படுத்தி, மேலும் அழகாக்கி தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். ஒவ்வொரு தருணத்துக்கும் ஏற்றது போல நீங்கள் மேக்கப்பை போட்டுக் கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 28

  அதிக விலை கொடுத்து வாங்கும் மேக்அப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த டிப்ஸ்

  உதாரணமாக திருமணத்திற்கு என்று வரும்பொழுது கொஞ்சம் அதிகப்படியான மேக் அப் போட்டுக் கொள்வதும், அலுவலகம் செல்லும்போது கண்ணை உறுத்தாத அளவுக்கு ஆனால் பளிச்சென்று தெரியுமாறு போட்டுக் கொள்வதும் பொருத்தமாக இருக்கும். மேக்கப் பொருட்களை நீங்கள் சரியான முறையில் பராமரிக்கவில்லை என்றால் அது நீண்ட காலத்திற்கு பயன்தராது.

  MORE
  GALLERIES

 • 38

  அதிக விலை கொடுத்து வாங்கும் மேக்அப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த டிப்ஸ்

  விலை அதிகமுள்ள நல்ல தரமான பொருட்களை பயன்படுத்துவதால் சருமத்தில் பாதிப்பு ஏற்படுத்தாமல் பாதுகாக்கும். அதே நேரத்தில் மேக்கப் பொருட்களின் ஷெல்ஃப் லைஃப் எனப்படும் எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் அதனை கையாளும் முறையில் இருக்கிறது. அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் முடி சூட்டா ராணியாக வலம் வரும் ஷானாஸ் ஹுசைன் மேக்கப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு உபயோகிக்கும் வகையில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பகிர்ந்த டிப்ஸ் இதோ.

  MORE
  GALLERIES

 • 48

  அதிக விலை கொடுத்து வாங்கும் மேக்அப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த டிப்ஸ்

  மேக்கப் பொருட்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள் : ஷேரிங் இஸ் கேரிங், அதாவது பகிர்வது மூலம் அன்பையும் பகிர்ந்து கொள்ளலாம் என்பது பல சூழல்களில் பொருந்தும். ஆனால், மேக்கப் பொருட்களை பொறுத்தவரை அவை மிகவும் தனிப்பட்ட பயன்பாட்டுக்கான பொருட்களாகும். எனவே அவற்றை நீங்கள் யாருடனும் பகிரக்கூடாது. உங்கள் சருமத்தின் மீது பயன்படுத்தப்படும் ஒரு பொருளை மற்றவர்கள் பயன்படுத்தினால் பிறர் சருமத்தில் இருக்கும் பாக்டீரியா உறிஞ்சப்பட்டு அது உங்கள் மேக்கப் சாதனத்தை பாழாக்கி விடும். அதுமட்டுமின்றி உங்களுக்கும் அதன் வழியாக தொற்று ஏற்படலாம்.

  MORE
  GALLERIES

 • 58

  அதிக விலை கொடுத்து வாங்கும் மேக்அப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த டிப்ஸ்

  வாங்குவதற்கு முன்பு காலாவதியாகும் தேதியைப் பாருங்கள் : வேலிடிட்டி அல்லது காலாவதி தேதி உள்ள எல்லா பொருட்களையும் வாங்கும் முன் சரிபார்க்க வேண்டும். மேக்கப் பொருட்களை வாங்கும்போது நீங்கள் எவ்வளவு காலம் அதை பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை கணக்கில் கொண்டு வாங்க வேண்டும். சில நேரங்களில் மேக்கப் பொருட்கள் அதிக தள்ளுபடி அல்லது சிறப்பு ஆஃபர் என்று குறைந்த விலையில் விற்கப்படும் ஆனால் அவற்றுக்கான காலாவதி தேதி மிகவும் அருகில் இருக்கும் காலாவதியான பொருட்களை பயன்படுத்தும் பொழுது உங்கள் சருமத்தில் பாதிப்பு ஏற்படும்.

  MORE
  GALLERIES

 • 68

  அதிக விலை கொடுத்து வாங்கும் மேக்அப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த டிப்ஸ்

  தனித்தனியான பிரஷ்களை பயன்படுத்தவும் மற்றும் பொருட்களை சுத்தமாக வைத்திருக்கவும் : மேக்கப் பொருத்தவரை மினிமல் மேக்கப் முதல ஹெவி மேக்கப் வரை, கண், இமைகள், கன்னம், உதடு என்று முகத்தின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒவ்வொரு வகையான மேக்கப் பொருட்கள் உள்ளன. அதே போல, ஒவ்வொரு மேக்கப் பொருளுக்கும் ஒவ்வொரு பிரஷ்கள் உள்ளன. உதாரணமாக முகத்திற்கு காம்பேக்ட் பவுடர் பயன்படுத்தினால் அதற்கு உபயோகித்த பிரஷ்ஷை ஹைலைட்டர் பூச பயன்படுத்தக்கூடாது. உதடுகளுக்கு பயன்படுத்திய பிரஷ்ஷில் கன்னங்களுக்கு பயன்படுத்தக்கடாது. மேலும் உங்கள் மேக்கப் சாதனத்தில் இருக்கும் பிரஷ்களை வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 78

  அதிக விலை கொடுத்து வாங்கும் மேக்அப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த டிப்ஸ்

  சுத்தமான இடத்தில் மேக்கப் சாதனங்களை பாதுகாப்பாக வைக்கவும் : நீங்கள் மேக்அப் சாதனங்கள் பயன்படுத்தும் பொழுது அவற்றை பாதுகாப்பான இடத்தில் அதிக வெளிச்சம் படாத இடத்தில் வைக்க வேண்டும். மேக்கப் சாதனங்களை திறந்து வைத்திருந்தால் எளிதாக கெட்டுப்போய்வடும். எனவே ஈரப்பதம் மற்றும் நேரடி வெளிச்சத்திலிருந்து மேக்கப் பொருட்களை பாதுகாப்பாக வைக்கவும்.

  MORE
  GALLERIES

 • 88

  அதிக விலை கொடுத்து வாங்கும் மேக்அப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த டிப்ஸ்

  எண்ணெய் அடிப்படையிலான மேக்கப் நீண்ட நாட்களுக்கு வரும் : பொதுவாகவே மேக்கப் பொருட்கள் எண்ணெய்-அடிப்படை மற்றும் தண்ணீர்-அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. உங்களுடைய மேக்கப் பொருட்கள் நீண்ட காலத்திற்கு உழைக்க வேண்டும் என்றால் நீங்கள் எண்ணெய்-அடிப்படையிலான மேக்கப் பொருட்களை வாங்கலாம். வாட்டர்-பேஸ்டு மேக்கப் பொருட்கள் பாக்டீரியா தொற்று பாதிப்பு ஏற்படுத்தும் ரிஸ்க் உள்ளது.

  MORE
  GALLERIES