நாளை தீபாவளியைக் கொண்டாட நாடே காத்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த தீபாவளிக்கு வீட்டை அலங்கரிப்பதே அங்கும் இங்குமாக சுற்றி வரும் பெண்கள்தான். அவர்களின் அழகு நிறைந்த முகம், மலர்ந்த புன்னகை என பாசிடிவிட்டியை நிரப்புவார்கள். இப்படி பெண்கள் தங்களை அலங்கரித்துக்கொள்ள மேக்அப் எப்படி அப்ளை செய்வது என்று பார்க்கலாம்.
பொலிவு தரும் ஃபவுண்டேஷன் : பிரைமர் அப்ளை செய்தவுடன் முகத்திற்கு பளிச் பொலிவு தரும் ஃபவுண்டேஷன் அப்ளை செய்ய வேண்டும். உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற ஃபவுண்டேஷன் வாங்கி அதில் பொட்டு அளவிற்கு ஃபவுண்டேஷன் எடுத்துக்கொண்டு முகம் முழுவதும் புள்ளிபோல் வைத்து பின் ஃபவுண்டேஷன் பிரஷ் அல்லது ஸ்பாஞ் கொண்டு ஒட்டி எடுங்கள். இதனால் சருமத்தில் சீராக பிளெண்டாகும். திட்டுகள் இல்லாமல் தடவுங்கள்.