ஆண் மற்றும் பெண் என இருவருக்கும் முகத்தில் உள்ள கவர்ச்சியான பாகங்களில் ஒன்று உதடு. எனவே தான் உதடு ரோஸ் நிறத்தில் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். ஆனாலும் சில காரணங்களால் நமது உதடு கருமையாக காணப்படும். அப்படி நீங்களும் அவதிப்பட்டால், உங்களுக்காக சில உதவிக்குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். அவை, உங்கள் உதட்டை சிவப்பாக்குவதுடன் மென்மையாகவும் ஆக்குகிறது.
இயல்பாகவே நமது தாத்தா பாட்டி காலத்தில் இருந்தே, அனைத்து விஷயங்களுக்கும் பொதுவாக பயன்படுத்தப்படுவது தேங்காய் எண்ணெய். இதை உதட்டிற்கு பயன்படுத்தி வந்தால் உதட்டின் கருமை நீங்கும் என உங்களுக்கு தெரியுமா?. தேங்காய் எண்ணெய் உதட்டை ஈரப்பதமாக்கும் தன்மையை கொண்டது. இதனால் உதடுகள் மென்மையாக இருப்பதோடு உதட்டில் உள்ள கருமையை போக்கவும் உதவுகிறது. எனவே, வறண்ட உதடுகளுக்கு தேங்காய் எண்ணெய்யை அப்ளே செய்து வரலாம்.
எலுமிச்சையுடன் தேன் : அழகு குறிப்பை பொறுத்தவரை தேன் இல்லாத எந்த குறிப்பையும் பார்க்க முடியாது. தேன் அலர்ஜி எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. எலுமிச்சை சருமத்தை பொலிவாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, எலுமிச்சை சாற்று உடன் தேன் சேர்த்து உதடுகளில் அப்ளே செய்து வந்தால் உதடுகளில் உள்ள கருமை நீங்குவதோடு உதடுகளும் சிவப்பாக மாறும்.