பெரியவர், சிறியவர், ஆண்கள், பெண்கள் என வேறுபாடு இல்லாமல் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு. முடி கொட்டுதலை கட்டுப்படுத்த நாமும் ட்ரை செய்யாத முறையே இருக்க முடியாது. சந்தைகளில் விற்பனையாகும் எண்ணெய் விளம்பரங்களை பார்த்து அவற்றையும் விட்டு வைக்காமல் முயற்சி செய்திருப்போம். ஆனால், அதற்கான பலன் நமக்கு கிடைத்திருக்காது. ஆனால், இயற்கையாக கிடைக்கும் பொருட்களை நாம் எட்டி கூட பார்ப்பதில்லை. இயற்கை நமக்கு அளித்த மூலிகைகள் யாவும் நம் ஆரோக்கியம் காக்கும் பொருட்கள் ஆகும். அந்த வகையில் நம் கூந்தல் உதிர்வதை தடுத்து, நீளமான கூந்தல் பெற உதவும் மூலிகைகள் மற்றும் அதன் பயன்களை இங்கு காணலாம்.