பளபளப்பான நம் முகத்தில் கரும்புள்ளி வைத்தாற்போல கண்களை சுற்றியிலும் இருக்கும் கரு வளையமானது நம் தோற்றத்தை பாதிக்கிறது. இதைப் போக்குவதற்காக நாம் பல சப்ளிமண்ட் மருந்துகள் மற்றும் கிரீம்களை எடுத்துக் கொள்கிறோம். ஆனால், இதில் நாம் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. நாம் சாப்பிடும் உணவு தான், நம் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. ஆகவே, ஆரோக்கியமான வாழ்வியலை நாம் கடைப்பிடிக்கத் தொடங்கினால், நமது சருமம் பளபளப்பாக மாறும். சில மோசமான பழக்க, வழக்கங்களால் நாம் உடனடியாக அறிந்து கொள்ள முடியாத உடல் நல பாதிப்புகள் ஏற்படும். உதாரணமாக கண் கருவளையங்கள்.
தர்பூசணி : நம் உடலுக்கு பி1, பி6 மற்றும் சி விட்டமின்களை கொடுக்கக் கூடியது தர்பூசணி ஆகும். அதேபோன்று பொட்டாஷியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்களும் கிடைக்கும். தர்பூசணியில் சுமார் 92 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. இது சருமத்தில் ஏற்படும் நீர் இழப்பு பிரச்சினையை சரி செய்வதற்கு உதவியாக இருக்கும்.