பொதுவெளியில் காணப்படும் அழுக்குகள், ரசாயன காற்று மாசுபாடுகளுக்கு மத்தியில் வெளியே சென்று வருவதால் தலை முடியில் அவை படிந்திருக்கும். எனவே அவற்றை முறையாக அகற்ற வேண்டும் என்பத்து போன்ற நோக்கங்களுக்காக தற்போது ஹேர் வாஷிங் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஹேர் வாஷ் என்னும் போது முதலில் வரும் கேள்வி எந்த ஷாம்புவை பயன்படுத்த வேண்டும் என்பது தான்.
பிரபலமான பல ஷாம்புக்கள் மார்க்கெட்டில் கிடைக்கும் நிலையில் எதை வாங்கி பயன்படுத்துவது என்று நமக்கு மிகவும் குழப்பமாக இருக்கும். எப்போதுமே உங்கள் முடி வகைக்கு ஏற்ப, மைல்டான ஹெர்பல் ஷாம்புவை தேர்ந்தெடுப்பது சரியாக இருக்கும். நினைவில் கொள்ள வேண்டிய அடுத்த முக்கிய விஷயம் என்னவென்றால், ஹேர் வாஷ் செய்யும் போது அதிக அளவு பயன்படுத்தாமல் குறைந்த அளவு ஷாம்பு பயன்படுத்த வேண்டும். மேலும் உங்கள் தலைமுடியை தண்ணீரில் நன்றாக அலச வேண்டும்.
ஒருவர் எத்தனை முறை ஹேர் வாஷ் செய்யலாம்.?
இது ஒருவரின் தனிப்பட்ட தேவையைப் பொறுத்தது. உதாரணமாக எண்ணெய் பசையுள்ள முடி கொண்டவர்கள் வெப்பமான, ஈரப்பதமான காலநிலையில் அடிக்கடி ஹேர் வாஷ் செய்ய வேண்டும். பொதுவாக எண்ணெய் பசையுள்ள முடி (oily hair) கொண்டவர்கள் வாரத்திற்கு 3 முறையும், வறண்ட கூந்தல் (dry hair) கொண்டவர்கள் வாரத்திற்கு 2 முறையும் தலைகுளிப்பது நன்று.
கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், தலைக்கு குளிப்பதால் முடிக்கு தீங்கு ஏற்படாது. மாறாக முடிக்கு தீங்கு விளைவிப்பது நீங்கள் பயன்படுத்தும் முடி பராமரிப்பிற்காக பயன்படுத்தும் தயாரிப்பு மற்றும் ஒவ்வொரு முறை தலைக்கு குளிக்கும் போது பயன்படுத்தும் ஷாம்பு அளவும் ஆகும். எனவே தான் எப்போதுமே மைல்டான ஹெர்பல் ஷாம்புவை பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஷார்ட்டான முடி கொண்டவர்கள் அரை டீஸ்பூன் ஷாம்பு, நல்ல லாங்கான முடி கொண்டவர்கள் ஒரு டீஸ்பூன் ஷாம்புவும் எடுத்து கொள்ளவும். பின் அதை சிறிது தண்ணீரில் கரைத்து பின்னர் தான் தலைக்கு தடவ வேண்டுமே தவிர நேரடியாக ஷாம்புவை தலைக்கு தேய்த்து கொள்ளாதீர்கள். அதே போல நீங்கள் ஷாம்புவை குறைவாக பயன்படுத்தினீர்கள் என்றால் தினசரி கூட உங்கள் ஆயிலை ஹேரை வாஷ் செய்யலாம்.
எப்படி வாஷ் செய்வது.? முதலில் உங்கள் தலைமுடியை நன்கு ஈரப்படுத்துங்கள். பின் தேநீரில் கரைக்கப்பட்ட ஷாம்புவை தலைக்கு தடவி, உங்கள் விரல் நுனியால் உச்சந்தலை மற்றும் முடியிலும் மென்மையாக தேய்க்கவும். நன்கு நுரை வரும் வரை உச்சந்தலை துவங்கி கூந்தலின் நுனி வரை தேய்க்க வேண்டும். முடியை வாஷ் செய்யும் போது நிறைய தண்ணீரை பயன்படுத்துங்கள். அப்போது தான் அழுக்குகள் முழுமையாக வெளியேறும். தலைக்கு குளித்தவுடன் துண்டை வைத்து அழுத்தி துடைக்க வேண்டாம். முடியில் இருக்கும் ஈரத்தை உறிஞ்சும் வகையில் சில நிமிடங்கள் தலையை சுற்றி துண்டை கட்டி கொள்ளுங்கள். அதே போல முடி ஈரமாக இருக்கும் போது சீப்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
ஷாம்புவிற்கு மாற்று: ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கைப்பிடி உலர்ந்த ரீத்தா (dry reetha), ஆம்லா மற்றும் சீகைக்காய் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். அடுத்த நாள் இந்த தண்ணீர் பாதியாக குறையும் வரை லோ ஃபிளேமில் கொதிக்க வைக்கவும். ஆறிய பிறகு ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஹேர் வாஷ் செய்ய ஷாம்புவிற்கு பதில் இந்த கலவையை பயன்படுத்தலாம்.