மகிழ்ச்சியை வரவேற்கும் பண்டிகை தினங்களில் நம்மை அலங்கரித்துக்கொள்வதிலும் அதிக அக்கறை செலுத்துவோம். புத்தாடை முதல் அலங்காரம் வரை ஒவ்வொன்றையும் பார்த்து வாங்குவோம். ஆனால் அந்த சமயத்தில் நம் முகம் டல்லாக இருந்தால் நன்றாகவா இருக்கும்..? எனவே உங்கள் முகத்தையும் பிரகாசிக்கச் செய்ய இந்த பர்ஃபெக்ட் காஃபி ஃபேஷியல் உங்களுக்கு உதவலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
முதலில் முகத்தை கிளென்சிங் செய்ய வேண்டும். அதாவது முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு, எண்ணெய் பிசுக்கை நீக்க வேண்டும். அதற்கு அரைத்த காஃபி கொட்டை தூளை கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் அதில் காய்ச்சாத பால் இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை இப்போது பஞ்சில் முக்கி முகம் முழுவதும் தேய்க்க வேண்டும். வட்டப்பாதையில் நெற்றி , கண்ணம், மூக்கு என கண்களைத் தவிர அனைத்து இடங்களையும் தேயுங்கள். பின் தண்ணீரில் கழுவி விடுங்கள்.
அடுத்ததாக ஸ்கிரப் செய்ய வேண்டும். இதில் இறந்த செல்களை நீக்க வேண்டும். அதற்கு பிரவுன் சுகர் 1 ஸ்பூன், காஃபி தூள் 1 ஸ்பூன் மற்றும் பாதாம் எண்ணெய் 3 சொட்டு விட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை அப்படியே எடுத்து முகத்தில் வட்டப்பாதையில் சுற்றி தேய்க்க வேண்டும். நன்கு தேய்க்க இறந்த செல்கள் நீங்கி முகம் சற்று பொலிவு பெறும்.
அடுத்ததாக ஃபேஸ் மாஸ்க் அப்ளை செய்ய வேண்டும். இதற்கு காஃபி தூள் 1 ஸ்பூன், சந்தனம் 1/2 ஸ்பூன் கடலை மாவு 1/2 ஸ்பூன் எடுத்து கலந்துகொள்ளுங்கள். பின் அதில் ரோஸ் வாட்டர் கலந்து மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். அதை இப்போது முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் காய வைத்து பின் கழுவுங்கள். இப்போது முகம் சோர்வான முகம் போய் ஜொலிக்கும் சருமத்தை பெற்றிருப்பீர்கள்.