அடையாளமே தெரியாத அளவிற்கு அழகாகக் காட்டும் இந்த பவுண்டேஷன் க்ரீம் மிகப்பெரும் வரப்பிரசாதம் போன்றது. பவுண்டேஷன் வாங்குவது அத்தனை சுலபமான காரியம் இல்லை. அழகான தோற்றத்திற்கு அதுதான் அடிப்படை. பலரும் தன் ஸ்கின் டோனிற்குப் பொருத்தமான ஷேடை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதைத் தெரிந்துகொள்வதில் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கான வழிகாட்டியாக சில குறிப்புகள்
சரும நிறத்தை தெரிந்து கொள்ளுங்கள் : உங்களின் ஸ்கின் டோன் குறித்து தெரிந்து கொள்வது அவசியம். மேற்புற முக -நிறத்தை தேர்வு செய்யாமல் முகத்தில் அடிப்படையான நிறத்தைக் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் முகத்தின் மேற்பரப்பு நிறம் பருவ மாற்றம், இட மாற்றம், காற்று ஆகியவற்றினால் வேறுபடும். இந்தியர்களின் ஸ்கின் அண்டர்டோன் பொதுவாக ஆலிவ் மற்றும் கோல்டு எல்லோயிஷ் டைப்பில் இருக்கும்.
எவ்வாறு கண்டறிவது : உங்களின் ஸ்கின் டோனைத் தெரிந்து கொள்ள உங்களின் ஸ்கின் டைப்பிற்கான பவுண்டேஷனைத் தேர்வு செய்து ஸ்கின் டோனைக் கண்டறிய சிறு துளி பவுண்டேஷன் ஷேடை நெற்றி அல்லது கழுத்துப் பகுதியில் அப்ளே செய்து பார்க்க வேண்டும். பவுண்டேஷன் அப்ளே செய்ததே தெரியாதது போல் இருந்தால் அது உங்களின் ஸ்கின் டோனோடு சரியாக பிளெண்ட் ஆகிறது என அர்த்தம். அதுதான் உங்களின் ஸ்கின் டோனிற்குப் பொருத்தமான பவுண்டேஷன். கைகளில் பவுண்டேஷன் அளித்து சோதனைச் செய்வதைத் தவிற்கவும்.