குறிப்பாக பாடிபில்டிங் செய்யக் கூடிய ஆண்களுக்கு முகத்தை போலவே உடலின் மற்ற பகுதிகளும் பொலிவுடன் காட்சியளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தொடைப்பகுதிகள் மிகக் கருமையாக இருக்கும் பட்சத்தில் பார்ப்பவர்களுக்கு முகம் சுளிக்க வைப்பதாக அமைந்து விடும். ஆகவே, ஒரு சில ஆண்கள் தொடை அழகு, பின்பக்க அழகு மீதும் கவனம் செலுத்துகின்றார்கள் என்றாலும் கூட, அனேக நபர்களுக்கு இதில் வெற்றி கிடைப்பதில்லை. ஆக, உங்கள் அந்தரங்க அழகை மேம்படுத்துவதற்கான ரகசிய ஆலோசனைங்கள் இதோ.
நிறம் இயல்பானது தான் : பின்பக்கத்திலும், தொடைகளிலும் சருமம் சற்று கருமையாக காட்சியளிப்பது இயல்பான விஷயம் தான். சருமம் ஆரோக்கியமாக இருந்தாலே போதுமானது. இருப்பினும் தனிப்பட்ட ஆசையின் காரணமாகவோ அல்லது பாடி பில்டிங், மாடலிங் போன்ற தொழில்களில் இருப்பதாலோ அந்தரங்க அழகை மேம்படுத்த நினைப்பவர்கள் பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றலாம்.
லேசர் சிகிச்சை : உங்கள் சருமம் உண்மையிலேயே மிக கருமையாக இருந்தால் மட்டும் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். பின்பக்கம் மற்றும் தொடைகளின் சருமத்தை உடனடியாக வெள்ளையாக மாற்றக் கூடிய தொழில் நேர்த்தி மிகுந்த சிகிச்சை முறைகள் தற்போது பிரபலமாக உள்ளன. இது தவிர சருமத்தின் நிறத்தை மாற்றக் கூடிய க்ரீம் அல்லது எண்ணெய் பயன்படுத்தலாம். வாரம் ஒருமுறை பப்பாளி, ஆரஞ்சு தோல் பவுடர், தயிர் சேர்த்த மாஸ்க் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம்.