மசாஜ் செய்ய சரியான நேரம் : பகல் பொழுதில் எந்த சமயத்தில் வேண்டுமானாலும் எண்ணெய் மசாஜ் செய்யலாம். உங்களுக்கு அதிக வேலைப்பாடுகள் இல்லாத சமயம் மற்றும் மன அமைதியான சூழலில் இதற்கு திட்டமிட்டுக் கொள்ளவும். அதே சமயம், எண்ணெய் மசாஜின் பலன்கள் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் இதை அதிகாலை பொழுதில் செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. காலையிலேயே மசாஜ் செய்து கொண்டால், அந்த நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். இதேபோன்று, மதியம் உணவு சாப்பிட்ட பிறகு, ஒரு மணி நேரம் கழித்தும் மசாஜ் செய்து கொள்ளலாம்.
மசாஜ் செய்கையில் கவனிக்க வேண்டியவை : எதுவும் சாப்பிடாமல், வெறும் வயிறாக இருக்கும்போது நீங்கள் மசாஜ் செய்து கொள்ள கூடாது. ஏனென்றால், மசாஜ் செய்யும்போது உங்கள் ஜீரண சக்தி அதிகரிக்கும், ரத்த சர்க்கரை அளவு குறையும். காலையில் மசாஜ் செய்வது என்றால் கொஞ்சம் பழங்கள் அல்லது ஸ்நாக்ஸ் சாப்பிட்ட பிறகு மசாஜ் செய்யவும். அதே சமயம், வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு மசாஜ் செய்வதையும் தவிர்க்க வேண்டும். அது மலச்சிக்கல் பிரச்சினைகளை உண்டாக்கும்.
எந்த எண்ணெய் மசாஜ் செய்ய பயன்படுத்தலாம் : கிராம்பு எண்ணெய், தைல (ஆரஸ்பதி) மர எண்ணெய், லாவண்டர் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பொதுவாக தமிழ் மக்கள் எண்ணெய் குழியல் என்றாலே நல்லெண்ணெய் பயன்படுத்துவது வழக்கம். இது உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை தரும். மசாஜ் செய்த பிறகு, குளிர்ந்த நீரில் சீயக்காய் தேய்த்து குளிப்பது நல்லது.