முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சருமத்திற்கு ’ரெட்டினோல்’ செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

சருமத்திற்கு ’ரெட்டினோல்’ செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

இது வைட்டமின் A-ன் ஆக்ட்டிவ் ஃபார்ம் ஆகும், இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் Cell turnover-ஐ துரிதப்படுத்துகிறது.

  • 19

    சருமத்திற்கு ’ரெட்டினோல்’ செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    நமது அன்றாட வழக்கத்தின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது தோல் பராமரிப்பு. நமது உடலின் மிகப்பெரிய உறுப்பாக இருக்கிறது தோல் (Skin). தீங்கு விளைவிக்கும் சுற்றுச்சூழல் காரணிகளிலிருந்து நம்மைப் பாதுகாப்பதில் நம்முடைய தோல் முக்கிய பங்கு வகிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 29

    சருமத்திற்கு ’ரெட்டினோல்’ செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    எனவே முறையான தோல் பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றுவது என்பது ஆரோக்கியமான மற்றும் இளமை தோற்றத்துடன் கூடிய சருமத்தை பராமரிக்க உதவுவதோடு நம்முடைய தன்னம்பிக்கை உணர்வை மேம்படுத்துகிறது. சரும பராமரிப்பு முறையில் ரெட்டினோலை பயன்படுத்துவது சருமத்திற்கு பல அற்புதங்களை செய்கிறது.

    MORE
    GALLERIES

  • 39

    சருமத்திற்கு ’ரெட்டினோல்’ செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    ரெட்டினோல் (Retinol) என்றால் என்ன? கடந்த சில ஆண்டுகளாக ரெட்டினோல் எனப்படும் வைட்டமின் ஏ அடிப்படையிலான வழித்தோன்றல் (Derivative of vitamin A) சரும பராமரிப்பு துறையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வைட்டமின் ஏ என்றும் அழைக்கப்படும் ரெட்டினோல், மனித உடலுக்குத் தேவையான ஒரு முக்கிய வைட்டமின் ஆகும். ரெட்டினோல் ஒரு பன்முக தோல் பராமரிப்பு மூலப்பொருள் (Multifaceted skincare ingredient) ஆகும். அற்புதமான பண்புகள் காரணமாக தோல் மருத்துவர்கள் மற்றும் தோல் பராமரிப்பு நிபுணர்களிடையே Retinol விருப்பமான மற்றும் பிரபலமான பொருளாக அமைகிறது.

    MORE
    GALLERIES

  • 49

    சருமத்திற்கு ’ரெட்டினோல்’ செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    இது லோ முதல் மீடியம் ஸ்ட்ரென்த்ஸ் கொண்ட ஓவர்-தி-கவுன்ட்டர் ஃபார்முலேஷன்களில் கிடைக்கிறது, அதே சமயம் ப்ரிஸ்கிரிப்ஷன்-ஸ்ட்ரென்த் வெர்ஷன்ஸ் அதிகபட்ச ஆற்றலை வழங்குகின்றன. ரெட்டினோல் கிரீம்ஸ், சீரம்ஸ் மற்றும் ஆயில் உள்ளிட்ட பல வடிவங்களில் கிடைப்பதால் எந்த தோல் பராமரிப்பு வழக்கத்திலும் எளிதாக சேர்த்து கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 59

    சருமத்திற்கு ’ரெட்டினோல்’ செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    ரெட்டினோலின் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள்: SkinInspired நிறுவனர் மற்றும் CEO-வான பியூஷ் ஜெயின் ரெட்டினோல் ஏன் நம்முடைய தோல் பராமரிப்பு முறையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் பற்றி விளக்கமளித்துள்ளார். இதுபற்றி கூறுகையில், ரெட்டினோலை தோலில் தடவும் போது ரெட்டினோயிக் ஆசிட்டாக மாற்றப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 69

    சருமத்திற்கு ’ரெட்டினோல்’ செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    இது வைட்டமின் A-ன் ஆக்ட்டிவ் ஃபார்ம் ஆகும், இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் Cell turnover-ஐ துரிதப்படுத்துகிறது. மேலும் இது முகப்பருவை குறைக்க, சருமத்தின் அமைப்பு மற்றும் தொனியை மேம்படுத்தம, சருமத்தில் ஏற்படும் கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கவும் உதவுகிறது. ரெட்டினோலின் குறிப்பிடத்தக்க நன்மைகளில் ஒன்று சருமத்தில் தோன்றும் கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கும் திறன் ஆகும். ரெட்டினோல் கொலாஜன் உருவாக்கத்திற்கு சப்போர்ட் செய்வதோடு சருமத்தை Plumping-ஆக மாற்ற உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 79

    சருமத்திற்கு ’ரெட்டினோல்’ செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    தவிர ரெட்டினோல் முகப்பருவை திறம்பட குணப்படுத்த உதவுவதோடு, போர்ஸ்களை கிளியர் செய்யவும் உதவுகிறது மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. இதனால் சருமத்தில் ஏற்படும் பிரேக்அவுட்ஸ் பிரச்சனைகளை தவிர்க்கலாம். மேலும் ரெட்டினோல் வயதாகும் அறிகுறிகளை எதிர்த்து போராட உதவுகிறது, தோல் வெடிப்பை குறைத்து தோல் மேற்பரப்பு மற்றும் தொனியை நன்கு மேம்படுத்துகிறது என்றார்.

    MORE
    GALLERIES

  • 89

    சருமத்திற்கு ’ரெட்டினோல்’ செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    அதே போல சமீப காலமாக நிறைய பேர் ரெட்டினோலை தங்கள் நைட் க்ரீமில் சேர்த்து பயன்படுத்த விரும்புகிறார்கள். ரெட்டினோல் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தோல் பராமரிப்பு நிபுணரும் கிளிட்ஸ் மற்றும் கிளாமர் அகாடமியின் உரிமையாளருமான ககோலி சென்குப்தா கூறுகையில், வறண்ட சருமத்திற்கு சிறப்பான பலன்களை ரெட்டினோல் அளிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 99

    சருமத்திற்கு ’ரெட்டினோல்’ செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    ஒரு நைட் கிரீம் சருமத்தை ஹைட்ரேஷனாக்குகிறது. இதனால் சருமத்தில் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கங்கள் மறைவதோடு மற்றும் சருமம் ஹைட்ரேட்டாக இருக்கும். ரெட்டினோல் அடங்கிய நைட் கிரீம் பயன்படுத்துவது அல்லது நைட் க்ரீமில் ரெட்டினோல் சேர்ப்பது முற்றிலும் நன்மைகளை அளிக்க கூடியது. ரெட்டினோல் சீரம் கூட சருமத்திற்கு அதிசயங்களை செய்யும் என குறிப்பிட்டுள்ளார் ககோலி சென்குப்தா.

    MORE
    GALLERIES