சூரிய வெளிச்சம், அதிகப்படியான கெமிக்கல் பயன்பாடு , மாசுபாடு உள்ளிட்ட கராணங்களால் கழுத்தைச் சுற்றிலும் கருமை தோன்றும். சில சமயம் அணியும் செயின், கழுத்தணிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள உலோகங்கள் சருமத்திற்கு ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இப்படி கருமை, அரிப்பு போன்றவை உண்டாகலாம். இந்த கருமையான தோற்றம் என்னதான் அழகாக மேக்-அப் செய்திருந்தாலும் அதைக் கெடுக்கும் விதமாக இருக்கும். எனவே இதை போக்க இந்த வீட்டுக் குறிப்புகளை செய்து பாருங்கள்.