உங்களது நகம் நன்கு நீளமாக மற்றும் வலுவாக இருக்க வேண்டுமா.! நீங்கள் விரும்பும் வண்ணம் நகங்களை பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் சில டிப்ஸ்கள் மற்றும் ட்ரிக்ஸ்கள் நகங்கள் அழகாக மற்றும் நீளமாக வளர உதவும் மற்றும் நகங்கள் வலிமையாகவும் இருக்கும். உங்கள் நகங்களை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது பற்றிய டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம்...
லெமன் ஜூஸ் : நகங்களின் வளர்ச்சிக்கு வைட்டமின் சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். லெமனில் வைட்டமின் சி நிறைந்திருப்பது நம் அனைவருக்கும் தெரியும். நீங்கள் செய்ய வேண்டியது ஒரு எலுமிச்சையை எடுத்து கொண்டு wedge ஷேப்பில் கட் செய்து கொள்ளுங்கள். பின் wedge ஷேப்பில் கட் செய்யப்பட்ட லெமனை உங்கள் விரல் நகங்கள் மற்றும் கால் நகங்களில் நன்கு தேய்க்க வேண்டும். 5 நிமிடம் வரை நகங்களில் நன்கு தேய்த்து பின் வெதுவெதுப்பான நீரில் நகங்களை கழுவவும். இது உங்கள் நகங்கள் வளர உதவுவதோடு, அவற்றை சுத்தமாகவும் பாக்டீரியாவும் இல்லாமல் வைத்திருக்கும். ஒரு நாளைக்கு ஒருமுறையாவது இப்படி செய்வது நீங்கள் விரும்பியபடி நகங்களை பெற உதவும்.
தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெய்யில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளது. சிறிதளவு தேங்காய் எண்ணெயை எடுத்து லேசாக சூடுபடுத்தி கொள்ளுங்கள். பின்னர் வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெயை கொண்டு உங்கள் நகங்களை மசாஜ் செய்வது நக வளர்ச்சியை ஊக்குவிக்கும். தினமும் இரவில் தூங்கும் முன் உங்கள் விரல் நகங்களை தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால் சில நாட்களில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.
ஆரஞ்சு ஜூஸ் : நகங்களின் வளர்ச்சிக்கு உதவும் கொலாஜன் உற்பத்திக்கு ஆரஞ்சு பெரிதும் உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நோய் தொற்றுகளை தடுக்கிறது. ஒரு பவுலில் சிறிதளவு ஆரஞ்சு ஜூஸ் எடுத்து கொள்ளுங்கள், உங்கள் நகங்களை சுமார் 10 நிமிடம் வரை அதில் மூழ்க வைத்து ஊற வைக்கவும். அதே போல ஆரஞ்சு ஜூஸில் ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது, இது நக வளர்ச்சிக்கும் உதவுகிறது.
பயோட்டின் எடுத்து கொள்ளுங்கள் : நகங்கள் மற்றும் முடி வளர்ச்சிக்கு தேவையான சக்தி வாய்ந்த வைட்டமின் பயோட்டின் ஆகும். வாழைப்பழங்கள் அல்லது அவகேடோ போன்ற பயோட்டின் நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்த்து கொள்வதோடு பயோட்டின் சப்ளிமென்ட்ஸையும் எடுத்து கொள்ளலாம். பயோட்டின் சப்ளிமென்ட்ஸ் எடுத்து கொள்ளும் முன் மருத்துவரை கலந்தாலோசித்து கொள்ளுங்கள்.
தேன் : பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை எதிர்த்து போராட தேன் உதவுகிறது. நகங்கள் மற்றும் க்யூட்டிகல்ஸை ஊட்டமாக மற்றும் மிருதுவாக வைத்திருக்க உதவுகிறது. சில துளிகள் லெமன் ஜூஸூடன் 2 டீஸ்பூன் தேனை கலந்து தேன் மற்றும் எலுமிச்சை நெயில் மாஸ்க்கை உருவாக்கவும். இதை உங்கள் நகங்களில் மசாஜ் செய்து 15 - 20 நிமிடங்கள் அப்படியே வைத்து பின் கழுவி கொள்ளவும்.
கார்லிக் ஆயில் : பூண்டில் செலினியம் நிறைந்துள்ளது, இது நகங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. பூண்டை எடுத்து துண்டு துண்டாக கட் செய்து அவற்றை உங்கள் விரல் நகங்களில் வைத்து நன்கு தேய்க்கவும். இப்படி செய்வது உங்களுக்கு எரிச்சலாக இருந்தால் பூண்டை பயன்படுத்தி ஆயில் ரெடி செய்து கொள்ளுங்கள். கார்லிக் ஆயிலை நெயில் மாஸ்க்காக பயன்படுத்தி கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை இதை முயற்சிக்கவும்.