முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » மோதிரம் அணிந்து விரல்களில் அடையாளம் ஏற்பட்டுவிட்டதா..? ஈசியாக நீக்கும் வழிகள் இங்கே...

மோதிரம் அணிந்து விரல்களில் அடையாளம் ஏற்பட்டுவிட்டதா..? ஈசியாக நீக்கும் வழிகள் இங்கே...

மோதிரத்தை தொடர்ந்து அணிவது விரலில் மோதிர அடையாளங்களை ஏற்படுத்தும். அது உங்களுக்கு விரல்களின் தோற்றத்தை கெடுப்பதாக நினைத்தால் , சில எளிய முறைகளின் உதவியுடன், அந்த அடையாளங்களை அகற்றலாம்.

 • 17

  மோதிரம் அணிந்து விரல்களில் அடையாளம் ஏற்பட்டுவிட்டதா..? ஈசியாக நீக்கும் வழிகள் இங்கே...

  சிலர் மோதிரம் அணிவதில் அதீத பிரியம் கொண்டிருப்பார்கள். விதவிதமான மோதிரங்கள் அணிவதும், சேகரித்து வைப்பதும்தான் அவர்களுடைய ஹாபியாகவும் இருக்கும். காரணம் மோதிரங்கள் விரல்களின் அழகை மெருகூட்டுகின்றன. அதேசமயம் தங்கள் தோற்றத்திற்கு ஸ்டைல் ஸ்டேட்மெண்டாகவும் மோதிரங்கள் இருக்கின்றன. இப்படி பல வகைகளில் அவை தவிர்க்க முடியாத அணிகலனாக இருப்பதால் தினமும் தவறாமல் அணிவார்கள்.

  MORE
  GALLERIES

 • 27

  மோதிரம் அணிந்து விரல்களில் அடையாளம் ஏற்பட்டுவிட்டதா..? ஈசியாக நீக்கும் வழிகள் இங்கே...

  அதேசமயம் மோதிரத்தை தொடர்ந்து அணிவது விரலில் மோதிர அடையாளங்களை ஏற்படுத்தும். அது உங்களுக்கு விரல்களின் தோற்றத்தை கெடுப்பதாக நினைத்தால் , சில எளிய முறைகளின் உதவியுடன், அந்த அடையாளங்களை அகற்றலாம். அவை என்னென்ன பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 37

  மோதிரம் அணிந்து விரல்களில் அடையாளம் ஏற்பட்டுவிட்டதா..? ஈசியாக நீக்கும் வழிகள் இங்கே...

  சன்ஸ்கிரீன் பயன்படுத்தவும் : சூரியக் கதிர்கள் பொதுவாக வளையப் பகுதியைப் பாதிக்காது. இதன் காரணமாக, மற்ற தோலுடன் ஒப்பிடும்போது மோதிரத் தோல் வெளிரிப்போய் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் கைகளில் சன்ஸ்கிரீன் அப்ளை செய்யும்போது விரல்களிலும் தேய்த்துக்கொள்ளுங்கள். இது ஈரப்பதம் கொடுத்து அடையாளத்தை ஏற்படுத்தும் வகையில் மோதிரம் தோலை இறுக்கிப்பிடிக்காமல் இலகுவாக இருக்க உதவும். இப்படி இருப்பதால் மோதிர அடையாளமும் வராது.

  MORE
  GALLERIES

 • 47

  மோதிரம் அணிந்து விரல்களில் அடையாளம் ஏற்பட்டுவிட்டதா..? ஈசியாக நீக்கும் வழிகள் இங்கே...

  எலுமிச்சை சாறு பயன்படுத்துங்கள் : மோதிர அடையாளங்களை நீக்க எலுமிச்சை சாற்றை முயற்சி செய்யலாம். இதற்கு எலுமிச்சை சாற்றில் 1 டீஸ்பூன் தேன் கலந்து அந்த இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். செய்முறையை வாரத்திற்கு 3 முறை பின்பற்றினால் கறை நீங்கும்.

  MORE
  GALLERIES

 • 57

  மோதிரம் அணிந்து விரல்களில் அடையாளம் ஏற்பட்டுவிட்டதா..? ஈசியாக நீக்கும் வழிகள் இங்கே...

  கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம் : கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி மோதிரக் கறைகளையும் நீக்கலாம். இதற்கு கற்றாழை ஜெல்லை ரிங் மார்க்கில் ஒரு நாளைக்கு மூன்று முறை தடவி, காய்ந்த பின் சுத்தமான தண்ணீரில் கைகளை கழுவ வேண்டும். உடனே ரிசல் தெரியவில்லை என்றாலும் நீண்ட நாள் பயன்படுத்த பலன் தெரியும்.

  MORE
  GALLERIES

 • 67

  மோதிரம் அணிந்து விரல்களில் அடையாளம் ஏற்பட்டுவிட்டதா..? ஈசியாக நீக்கும் வழிகள் இங்கே...

  எக்ஸ்ஃபாலியேட் : தோல்களில் உள்ள இறந்த செல்களை நீக்க எக்ஸ்ஃபாலியேட் செய்வோம். அதே முறையை விரல்களுக்கும் செய்வதன் மூலம். இறந்த செல்கள் நீங்கி , தோல் புத்துணர்ச்சி அடையும். இதனால் அடையாளங்கள் மாறலாம்.

  MORE
  GALLERIES

 • 77

  மோதிரம் அணிந்து விரல்களில் அடையாளம் ஏற்பட்டுவிட்டதா..? ஈசியாக நீக்கும் வழிகள் இங்கே...

  மற்ற நேரங்களில் கழட்டி வைக்கலாம் : வெளியே சென்று வந்த பின் வீட்டில் மோதிரத்தை கழட்டி வைத்துவிடுங்கள். பின் முகம் கைழுவும் போது கைகளையும் நன்கு கழுவி பின் மாய்ஸ்சரைசஸ் அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். இதனால் இரத்த ஓட்டம் அந்த இடத்தில் அதிகரிக்கும். நீடித்த அடையாளங்களும் மாறும்.

  MORE
  GALLERIES