உதடுகளில் கோடுகள் இருப்பது இயல்பான விஷயம். ஆனால், சிலரின் உதடுகளில் அளவுக்கு அதிகமான கொடுக்கல் அல்லது சுருக்கங்கள் காணப்படும். அவை, பார்ப்பதற்கு விசித்திரமாக காணப்படும். அவற்றை மறைக்க நாம் சில சமயங்களில் புது புது லிப்ஸ்டிக்-களை முயற்சிப்போம். ஆனால், இனி அவற்றை மறைக்க வேண்டாம். வீட்டில் இயல்பாக இருக்கும் சில பொருட்களை வைத்து, உதட்டில் உள்ள மென்கோடுகள் மற்றும் சுருக்கங்களை போக்கி மிருதுவான மற்றும் மென்மையான உதடுகள் பெற உதவும் சில எண்ணெய்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.