முகப்பு » புகைப்பட செய்தி » சூரிய ஒளியால் உங்க தோல் கறுப்பாகிருச்சா?... அப்போ இதை ட்ரை பண்ணுங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

சூரிய ஒளியால் உங்க தோல் கறுப்பாகிருச்சா?... அப்போ இதை ட்ரை பண்ணுங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

Home Remedies For Sunburn And Tanning | கோடை காலத்தில் வீட்டை விட்டு வெளியேயே செல்ல நாம் அனைவரும் அதிகமாக யோசிப்போம். அதற்கு காரணம், சூரிய கதிர்களின் தாக்கம். இனி பயம் வேண்டாம்… ஒரே இரவில் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சன் டானை எளிமையாக கட்டலாம்.

 • 16

  சூரிய ஒளியால் உங்க தோல் கறுப்பாகிருச்சா?... அப்போ இதை ட்ரை பண்ணுங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

  Summer Skin Care Tips : நம்மில் பலர் அடிக்கும் வெயிலுக்கு பயந்து கோடை காலத்தில் பெரும்பாலும் வெளியில் செல்லும் திட்டத்தை தவிர்ப்போம். ஏனென்றால், சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அதிக வெப்பம் காரணமாக தோல் மற்றும் முடி விரைவாக சேதமடைகின்றன. பெரும்பாலும் முடியை விட தோல்களில் தான் சூரிய கதிர்களின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

  MORE
  GALLERIES

 • 26

  சூரிய ஒளியால் உங்க தோல் கறுப்பாகிருச்சா?... அப்போ இதை ட்ரை பண்ணுங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

  மதிய நேர வெயிலில் ஒரு 10 நிமிடம் நின்றால் போதும், ஆடைகள் அணிந்த இடங்கள் ஒரு கலராகவும், வெயில் பட்ட இடங்கள் ஒரு கலரிலும் இருக்கும். சூரிய கதிர்களால் தோல் கருப்பதுடன் சில சமயங்களில் தோல் உரியும் பிரச்சனையும் ஏற்படும். அதுமட்டும் அல்ல, வெயில் காரணமாக, எரிச்சல், அரிப்பு மற்றும் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

  MORE
  GALLERIES

 • 36

  சூரிய ஒளியால் உங்க தோல் கறுப்பாகிருச்சா?... அப்போ இதை ட்ரை பண்ணுங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

  இதை சரிசெய்ய நாம் ஆயிரக்கணக்கில் செலவு செய்து, சந்தைகளில் கிடைக்கும் இரசாயன பொருட்களை வாங்கி உபயோகிப்போம். இவை உங்கள் சருமத்தை இன்னும் சேதமடைய வைக்கும். ஆனால், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஒரே இரவில் சன் டானை சரி செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?.... ஆமாம், நமது வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து உங்கள் சருமத்தை எப்படி பராமரிக்கலாம் என்பது குறித்து நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

  MORE
  GALLERIES

 • 46

  சூரிய ஒளியால் உங்க தோல் கறுப்பாகிருச்சா?... அப்போ இதை ட்ரை பண்ணுங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

  அலோ வேரா ஜெல் : அலோ வேரா ஜெல் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் இயற்கையான பொருள். சூரிய ஒளி, தோல் வேக்காடு பிரச்சனை போன்றவற்றை சரி செய்ய கற்றாழை ஜெல்லை உபயோகிக்கலாம். இது சருமத்தை உள்ளே இருந்து ஊட்டமளிக்கிறது மற்றும் சேதமடைந்த சருமத்தை குணப்படுத்துகிறது. கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை சேர்த்து முகம், கை, கழுத்துகளில் தடவினால் வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்கி சருமம் மென்மையாக காணப்படும்.

  MORE
  GALLERIES

 • 56

  சூரிய ஒளியால் உங்க தோல் கறுப்பாகிருச்சா?... அப்போ இதை ட்ரை பண்ணுங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

  எலுமிச்சை மற்றும் தேன் : வெயில் தாக்கத்தில் இருந்து நிவாரணம் பெற எலுமிச்சை மற்றும் தேனை சேர்த்து பயன்படுத்தலாம். இவை இரண்டிலும் சன் டானை அகற்ற உதவும் சில வேதிப்பொருட்கள் உள்ளன. இதற்கு, ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தேன் எடுத்து, சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இப்போது அதை நன்றாக கலக்கவும். இந்த பேஸ்ட்டை தோலில் தேய்த்து அரை மணி நேரம் அப்படியே விடவும். இதற்குப் பிறகு சருமத்தை குளிர்ந்த நீரை கொண்டு கழுவவும். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.

  MORE
  GALLERIES

 • 66

  சூரிய ஒளியால் உங்க தோல் கறுப்பாகிருச்சா?... அப்போ இதை ட்ரை பண்ணுங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

  தக்காளி ஃபேஸ் பேக் : தக்காளியில் இயற்கையாகவே சில ப்ளீச்சிங் அமிலங்கள் உள்ளன. அவை சருமத்தில் உள்ள கறைகளை நீக்க உதவுகின்றன. இதில், லைகோபீன் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இவை இறந்த சருமத்தை நீக்குகிறது. அதன் உதவியுடன், நீங்கள் சன் பர்ன் அல்லது டான்களை முழுமையாக நீக்க முடியும். இதற்கு முதலில் ஒரு தக்காளியை எடுத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். இப்போது அதை தோலில் தடவி 15 நிமிடங்கள் விடவும். பிறகு முகத்தை கழுவினால் நல்ல மாற்றம் தெரியும்.

  MORE
  GALLERIES