காஷ்மீர் எப்படி வெண் பனியால் சூழப்பட்டு கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்கிறதோ, அதேபோல் இயற்கையோடு இணைந்து வாழும் காஷ்மீரி பெண்களின் அழகும் வேறு எந்த மாநிலத்திலும் காணாத சிறப்பாக உள்ளது. காஷ்மீரில் விளையும் குங்குமப்பூவைப் போல் நிறம், ஆப்பிளைப் போல் செழுமை, வெண் பனியைப் போல் மாசு மருவற்ற பளபளப்பான சருமம் என விளங்க காரணம் என்ன என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
குங்குமப்பூ: உலகின் விலை உயர்ந்த நறுமண பொருளாக காஷ்மீர் குங்குமப்பூ உள்ளது. இது சமையலுக்கு மட்டுமல்ல சரும ஜொலி ஜொலிப்பிற்கு உதவக்கூடியது. பிற பகுதிகளில் கிடைக்கும் குங்குமப்பூவை விட காஷ்மீர் குங்குமப்பூவில் குரோசின் எனப்படும் நிறம் மற்றும் மருத்துவ குணம் நிறைந்த பொருளின் அளவு 8.72 சதவீதம் உள்ளது, அதனால் தான் அவை அத்தனை மதிப்பு மிக்கதாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சிறப்பான பொருள் விளையும் மண்ணின் பெண்கள் சிவப்பழகுடன் திகழ்வதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதும் இல்லை. காஷ்மீர் குங்குமப்பூவை பாலில் கலந்து முகத்தில் தடவி வந்தால், பிரகாசமான நிறத்தை பெறலாம்.
காஷ்மீர் கஹ்வா டீ: காஷ்மீர் மாநிலத்தில் பிரபலமான கஹ்வா டீ, அம்மாநிலத்தில் விளையும் டீ, குங்குமப்பூ, இலவங்கப்பட்டை, ஏலக்காய் (green tea, saffron, cinnamon and cardamom) ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சர்க்கரை தேன் அல்லது பாதாமுடன் இந்த இனிப்பான டீ பரிமாறப்படுகிறது. இந்த டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது, இது சரும ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கிறது.
பாதாம் பேஸ்ட் மற்றும் எண்ணெய்:காஷ்மீர் பெண்கள் இரவில் 8-10 பாதாம் பருப்பை பாலில் ஊறவைத்து, காலையில் அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்க்ரப்பாகப் பயன்படுத்துகிறார்கள்.
காஷ்மீரில் விளையக்கூடிய தரமான பாதாம்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பாதாம் எண்ணெய்யை முகத்திற்கு பூசி மசாஜ் செய்வதால் இயற்கையான பளபளப்பு கிடைக்கிறது.