ஐ மேக்கப் வகைகளையும், எந்த சருமத்திற்கு எந்த வகையான அழகு சாதன பொருட்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதிலும் எப்போதும் கூடுதல் கவனம் தேவை. குறிப்பாக கண் இமை பகுதிகளில் பயன்படுத்தக்கூடிய ஐ லைனர், மஸ்காரா, ஐnஷேடோ போன்ற பொருட்களை வாங்குவதில் காட்டும் அதே ஆர்வத்தை ஐலேஷ் கர்லர் விஷயத்திலும் காட்ட வேண்டும்.
கண்களுக்கு மேக்கப் செய்யும் போது, இமைகளை ஐலேஷ் கர்லர் கொண்டு சுருட்டிவிடுவது அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக அமைகிறது. சினிமா ஹீரோக்கள், பேஷன் மாடல்களைப் போன்ற அடர்த்தியான, அழகான கண் இமைகளை பெற விரும்பினால் ஐ லேஷ் கர்லரை வாங்குவதில் தயக்கம் காட்ட தேவையில்லை. இருப்பினும், அதனை சரியாகப் பயன்படுத்துவது எப்படி என்பதை அறிவது முக்கியமானது. ஐ மேக்கப்பை மேம்படுத்தக்கூடிய ஐ லேஷ் கர்லரை பயன்படுத்துவது எப்படி என் தெரிந்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் ஐலேஷ் கர்லரை பயன்படுத்தும் முன்பு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி அறிந்து கொள்ளலாம்..
1. பொருத்தமான தேர்வு: ஒவ்வொரு பெண்ணின் கண் இமைகளில் உள்ள முடியும் தனித்தன்மை கொண்டது. சிலருக்கு அடர்த்தியான கண் இமைகள் இருக்கும், சிலருக்கு மென்மையான கண் இமைகள் இருக்கும். எனவே உங்கள் கண் இமைகளுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கண்களின் வடிவத்தையும் கண் இமைகளின் நீளத்தையும் கவனத்தில் கொண்டு கர்லரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. பராமரிப்பு: மேக்கப் பிரஷ்களை சுத்தப்படுத்துவதைப் போலவே ஐலேஷ் கர்லரையும் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். இல்லையேல் கண் சம்பந்தமான தொற்று நோய்கள் ஏற்படக்கூடும். ஒவ்வொரு முறை ஐலேஷ் கர்லரை பயன்படுத்திய பிறகும் அதனை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். மேக்கப் ரிமூவரை கொண்டும் ஐலேஷ் கர்லரை துடைத்து சுத்தப்படுத்தலாம்.
5. கர்லருக்கும் காலாவதி தேதி உண்டு: உலோகத்தால் ஆன ஐலேஷ் கர்லருக்கு கூட காலாவதி தேதி உண்டா? என ஆச்சர்யம் அடைய வேண்டாம். கர்லிங் பேட்கள் காலப்போக்கில் தேய்ந்துபோவதால், கவர்ச்சிகரமான கர்லிங்கை தர முடியாமல் போகும். எனவே குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை ஐலேஷ் கர்லர்களை மாற்ற வேண்டும். பணத்தை மிஞ்சப்படுத்த நினைப்பவர்கள் கர்லிங் பேட்களை மாற்றக்கூடிய ஐலேஷ் கர்லர்களை பயன்படுத்தலாம்.
6. அடிக்கடி பயன்படுத்தலாமா? அடர்த்தியான, சுருண்ட கண் இமைகளை எந்த பெண்ணுக்குத் தான் பிடிக்காது?.... அதற்காக கண் இமைகளை அடிக்கடி ஐ லேஷ் கர்லர்களைக் கொண்டு அடிக்கடி கர்ல் செய்வது ஆபத்தானது. மென்மையான கண் இமைகளை சரியான முறையை பயன்படுத்தி நீங்கள் அடிக்கடி செய்தாலும், இமையில் முடியை இழக்க நேரிடலாம்.