பல்வேறு ஆராய்ச்சிகளின்படி, மனிதர்களுக்கு ஏற்படும் அனைத்து நோய்களிலும் சருமம் சார்ந்த சிக்கல்கள் அல்லது நோய்கள் சுமார் 1.7%-ஆக இருக்கின்றன. சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக ஒருவருக்கு அரிப்பு, ரேஷஸ் உள்ளிட்ட பல அறிகுறிகள் ஏற்படுகின்றன.எனவே சருமத்தில் ஏற்படும் கோளாறுகளுக்கு சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை பெறுவது அவசியமாகிறது. சொரியாசிஸ், விட்டிலிகோ, அரிக்கும் தோலழற்சி, முகப்பருக்கள் மற்றும் கட்டிகள், ஸ்கின் அலர்ஜி போன்ற தோல் பிரச்சினைகள் பாதிக்கப்படும் நோயாளிகளின் கவலைகளை அதிகரிக்க கூடும்.
இயற்கை முறையில் சருமத்தை கவனித்து கொள்ளலாம்: மார்க்கெட்டில் பல தோல் பராமரிப்பு சிகிச்சைகள் கிடைத்தாலும் எப்போதும் இயற்கையான முறையில் சரும பாதிப்புகளுக்கான தீர்வை முயற்சிப்பது பயனுள்ளதாக இருக்கும். சரும பாதிப்புகளை தவிர்க்க எப்போதும் ஹைட்ரேட்டாக இருக்க நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். உங்கள் சருமம் நன்மைகளை பெற Humidifier உதவியுடன் ட்ரை செய்வதை தவிர்க்கலாம். ஹை-குவாலிட்டி மாய்ஸ்சரைசரை வாங்கி பயன்படுத்துவது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க சிறந்த வழிகளில் ஒன்று ஆகும்.
அதே போல குளிர்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை தவிர்க்க முக்கிய ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்களது தினசரி டயட்டில் சேர்த்து கொள்வது அவசியம். ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் , கோல்ட் வாட்டர் சால்மன் மற்றும் ஆளிவிதைகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது சருமம் விரைவில் முதிர்ச்சியடைவதை தடுக்க உதவும். ஒருவேளை நீங்கள் சரும வறட்சி. அதாவது ட்ரை ஸ்கின் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், ஒருசில வீட்டு சிகிச்சைகள் பலனளிக்கலாம். ஆனால் பல நாட்கள் முயற்சித்தும் அவை பலன் தரவில்லை என்றால் தகுந்த நிபுணரை கலந்தாலோசிப்பது நல்லது.
தோல் பராமரிப்பில் ஹோமியோபதி சிகிச்சை : ஹோமியோபதி சிகிச்சையானது பிற வழக்கமான மருத்துவ சிகிச்சை முறைகளில் இருந்து வேறுபட்டது. ஹோமியோபதி சிகிச்சையானது சரும பிரச்சனைகளை தீர்க்க உதவுவதோடு பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே அடிக்கடி ஏற்படும் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தின் அடிப்படை பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கிறது.
எனவே குளிர் சீசனில் சரும பாதிப்புகள் ஏற்பட காரணம் எதுவாக இருந்தாலும் இந்த ஹோமியோபதி சிகிச்சை முறை அனைத்து நாள்பட்ட தோல் நோய்களுக்கும் தகுந்த சிகிச்சை தீர்வை வழங்குகிறது. சரும சிகிச்சைகளுக்கு மட்டுமின்றி குளிர் சீசனில் ஏற்படும் முடி பராமரிப்பு சிரமங்களுக்கும் ஹோமியோபதி சிகிச்சை மேற்கொள்ளலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். பொதுவாக ஹோமியோபதி மருந்துகள் தாவர அடிப்படையிலான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுவதால், அவை பாதுகாப்பானவை மற்றும் பாதக மருந்து எதிர்வினைகளை (ADR - Adverse Drug Reactions) கொண்டிருக்கவில்லை.
கிராஃபைட்ஸ் (Graphites) : இந்த ஹோமியோபதி வைத்தியம் கை கால்களின் வளைவுகள், க்ரோயின்ஸ், கழுத்து மற்றும் காதுகளுக்குப் பின்னால் உள்ள ராநெஸ் (rawness)-ஐ குணப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. தவிர தழும்புகளை குறைக்கவும் இந்த மருந்து உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் ப்ளீடிங், வெடிப்பு மற்றும் வலியுடன் கூடிய பருக்கள் மற்றும் கெலாய்டு மற்றும் ஃபைப்ரோமாக்களின் ஆரம்ப நிலைகளுக்கு சிகிச்சை அளிக்கிறது.