வேகமான மற்றும் மெஷின் வாழ்க்கைக்கு மத்தியில் தங்களை பார்த்து கொள்ள கூட நேரத்தை செலவழிப்பது சாத்தியமில்லாமல் போகிறது. நீங்கள் கடைசியாக எப்போது தோல் பராமரிப்பில் ஈடுபட்டீர்கள் அல்லது ரிலாக்ஸிங் சலூனுக்கு எப்போது சென்று என்ஜாய் செய்து மகிழ்ந்தீர்கள் என்று நினைவிருக்கிறதா.? தற்போதைய நவீன கால வாழ்க்கை முறைகள் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் நமது சருமத்தை மோசமாக பாதிக்கிறது. மேலும் கருவளையங்கள், கரும்புள்ளிகள், மந்தமான சருமம் போன்ற பிரச்சனைகள் ஒரு அழகான சருமத்தின் பொலிவை மங்க செய்து விடுகிறது.
முல்தானி மிட்டி மாஸ்க் (Classic Multani Mitti mask): இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது முகப்பருவை குறைக்கவும், இயற்கையான பிரகாசத்தை உங்கள் சருமத்திற்கு வழங்கவும் உதவும். சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கும். அழுக்கு, வியர்வை மற்றும் அசுத்தங்களை நீக்கி சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துகிறது. மேலும் முல்தானி மிட்டி ஒரு சிறந்த கூலிங் ஏஜன்ட்டாகவும் செயல்படுகிறது. இதனை பால் அல்லது தண்ணீரில் கலந்து வாரம் இருமுறை தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பப்பாளி மற்றும் தேன் மாஸ்க் : ஹைப்பர் பிக்மென்டேஷன், சீரற்ற தோல் மற்றும் சன்ஸ்பாட்ஸ் போன்ற தோல் பிரச்சனைகளை கொண்ட நபர்களுக்கு இந்த ஃபேஸ் மாஸ்க் சிறந்த பலன்களை தருகிறது. மசித்த பப்பாளி மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து சுமார் 15 - 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவுது சருமத்தை பொலிவாக்கும்.
கடலை மாவு ஃபேஸ் மாஸ்க்: சரும பொலிவை மீண்டும் பெற உதவும் மிக அற்புதமான பொருட்களில் ஒன்று கடலை மாவு. இது ஒரு சிறந்த ஸ்க்ரப்பாக செயல்படுகிறது. மேலும் இது இறந்த சருமத்தை (dead skin) நீக்குகிறது. உங்கள் சருமத்தை மென்மையாக்குகிறது மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக மற்றும் பளபளப்பாகவும் மாற்றுகிறது. கடலை மாவை தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து முகத்தில் தடவலாம்.
காஃபி ஃபேஸ் மாஸ்க்: முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை குறைக்கும் ஒரு சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டர் காஃபி ஆகும். கருவளையம் மற்றும் வீங்கிய கண்கள் போன்ற கண்களுக்குக் கீழே ஏற்படும் பிரச்சனைகளுக்கு இது நன்றாக உதவுகிறது. காஃபி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது இறந்த செல்களை நீக்கி சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். காஃபி பவுடரையும் தேனையும் சேர்த்து முகத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.