பொட்டு வைப்பது இந்து கலாச்சாரத்தில் இன்றியமையாத பகுதியாகும். நெற்றியில் பொட்டு வைக்காமல் எந்தவொரு அலங்காரமும் முழுமையடையாது. பொட்டுக்கள் பொதுவாக நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் வைக்கப்படும். பொட்டு வைப்பது உங்கள் அழகை மேம்படுத்தி காட்ட மட்டுமின்றி, உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது. பொட்டு வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.
தலைவலியைப் போக்கும் : நம் நெற்றியில் ஒரு குறிப்பிட்ட புள்ளி உள்ளது, இந்த புள்ளியில் நாம் மசாஜ் செய்யும்போது உடனடியாக தலைவலியில் இருந்து நிவாரணம் பெற முடியும். நரம்புகள் மற்றும் இரத்தக் குழாய்களின் ஒருங்கிணைப்பு அங்கு இருப்பதே இதற்கு காரணம். எனவே அக்குபிரஷரின் கொள்கைகளின்படி அந்த இடத்தில் பொட்டு வைக்கும்போது, உடனடியாக நமக்கு தலைவலி பிரச்னை சரியாகிறது. எனவே பெண்கள் தினமும் பொட்டு வைப்பது அவசியம்.
சைனஸை தவிர்க்க : பொட்டு வைப்பதால் நாசிப் பாதை, மூக்கின் சளி சவ்வு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் தூண்டப்படுகின்றன. மேலும் இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் சைனஸ் பிரச்னை குணமாகி, மூக்கில் வீக்கத்தையும் குறைக்கிறது. அதுமட்டுமின்றி மூக்கடைப்பு, நாசி நெரிசல் மற்றும் சைனசிடிஸை உள்ளிட்ட பிரச்சனைகளும் சரி செய்கிறது.
தூக்கமின்மையை தவிர்க்க : பொட்டு வைப்பதால் தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சனைகளையும் குணப்படுத்த முடியும். இது உங்கள் மனதை அமைதிப்படுத்துவதோடு, உங்கள் கழுத்து, உடல், முகம் மற்றும் பின்புறத்தின் தசைகளை தளர்த்தும். எனவே பொட்டு வைத்து அந்த இடத்தை தினமும் சிறிது நேரம் அழுத்துவதன் மூலம் எளிதாக தூங்க உதவும்.
உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது : நாம் பொட்டு வைக்கும் புருவங்களுக்கு இடையில் உள்ள புள்ளியை தினமும் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் இந்த பகுதியில் உள்ள தசைகள் மற்றும் நரம்புகளை தளர்த்த முடியும். இதனால் நமது உடல் மற்றும் மனம் அமைதியடைகிறது. எனவே நீங்கள் மனஅழுத்ததில் இருக்கும் போது பொட்டு வைத்து அந்த இடத்தில் மெண்மையாக அழுத்தம் கொடுக்கலாம். இதனால் மனஅழுத்தம் நீங்க தினமும் பொட்டு வைக்க வேண்டும்.
கண்களுக்கு நல்லது : சுப்ராட்ரோக்லியர் என்ற நரம்பு நாம் பொட்டு வைக்கும் பகுதி வழியாக செல்கிறது, இது முக்கோண நரம்பின் கண் பிரிவின் ஒரு கிளையாகும். இந்த நரம்பு கண்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதால் இங்கு பொட்டு வைப்பது இந்த நரம்பைத் தூண்டுகிறது. இந்த நரம்பின் தூண்டுதல் பார்வை மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த நேரடியாக உதவுகிறது. இதனால் உங்கள் கண் ஆரோக்கியம் மேம்படும் என்பதால் பார்வை தொடர்பான பிரச்னைகள் ஏற்படாது.
செவித்திறனை அதிகரிக்க : நமது நெற்றிப்பொட்டு பகுதி வழியாக கோக்லியர் என்ற நரம்பு செல்கிறது. இது உள் காதுகளின் முக்கிய பகுதியாகும் மற்றும் காது கேட்பதற்கு இந்த நரம்பு அவசியமான ஒன்றாகும். எனவே, இந்த புள்ளியைத் தூண்டும்போது, அது நம் காதுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் கேட்கும் திறனும் மேம்படுகிறது. எனவே தினமும் உங்களுக்கு பிடித்த வண்ணத்தில் பொட்டு வைத்துகொள்ளுங்கள்.
இளமையாக இருக்க உதவுகிறது : பொட்டு வைப்பது உங்களை அழகாக காட்டுவது மட்டுமின்றி, உங்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்களை குறைத்து இளமையை தக்கவைத்து கொள்ள உதவுகிறது. மேலும் இது முகத்தின் தசைகளைத் தூண்டும் அனைத்து தசைகளுக்கும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உங்கள் முகம் எப்போதும் பொலிவாக இருக்கும்.