முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » முடி ரொம்ப கொட்டுதா..? சீயக்காயை இப்படி அப்ளை பண்ணுங்க..!

முடி ரொம்ப கொட்டுதா..? சீயக்காயை இப்படி அப்ளை பண்ணுங்க..!

தலைமுடியை முறையாக பராமரிக்காமல் விடும் போது தான் முடி உதிர்தல், பொடுகுத்தொல்லை, முடி வெடிப்பு, செம்பட்டையான நிறம், அடர்த்தியின்மை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

 • 16

  முடி ரொம்ப கொட்டுதா..? சீயக்காயை இப்படி அப்ளை பண்ணுங்க..!

  ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் சரி தலைமுடி என்பது அவர்களின் அழகை கூடுதலாக காட்டுவதற்கு பேருதவியாக உள்ளது. ஆனால் முறையாக பராமரிக்காமல் விடும் போது தான் முடி உதிர்தல், பொடுகுத்தொல்லை, முடி வெடிப்பு, செம்பட்டையான நிறம், அடர்த்தியின்மை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே சந்தையில் விற்பனையாகும் பல ஷாம்புகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இதைப் பயன்படுத்தும் போது நம்முடைய தலைமுடி மிகுந்த பாதிப்பை சந்திக்கிறது. இதுப்போன்ற பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்றால் அது சீயக்காயாக தான் இருக்க முடியும். நீங்கள் ஹேர் பேக் பயன்படுத்துவது போல, சீயக்காய் பேக் பயன்படுத்தி உங்களது தலைமுடியை ஆரோக்கியமாக பாதுகாத்துக் கொள்ள முடியும். இதோ எப்படி? என்பது குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.

  MORE
  GALLERIES

 • 26

  முடி ரொம்ப கொட்டுதா..? சீயக்காயை இப்படி அப்ளை பண்ணுங்க..!

  பொடுகு பிரச்சனைக்குத் தீர்வு : நாம் அனைவரும் சந்திக்கும் பெரிய தலைமுடி பிரச்சனைகளில் ஒன்று தான் பொடுகு. கூந்தலுக்கு ஒவ்வாத பொருள்கள் அல்லது போதுமான பராமரிப்பின்மையால் தான் பொடுகு அதிகரிக்கிறது. இதற்கு நீங்கள் சீயக்காய் பயன்படுத்த வேண்டும். இது பூஞ்சை காளாண் பண்புகளைக் கொண்டிருப்பதால் பொடுகைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீங்கள் சீயக்காயை மட்டும் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிர், சீயக்காய், வெந்தயம், அம்லா மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற பொருள்களைக் கலந்து உபயோகிக்கலாம். தயிரில் ஆரோக்கிய பாக்டீரியாக்கள் உள்ளதால், பொடுகுக்கு எதிராக போராட உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 36

  முடி ரொம்ப கொட்டுதா..? சீயக்காயை இப்படி அப்ளை பண்ணுங்க..!

  சீயக்காய் ஹேர் பேக் செய்முறை  : (தயிர் – 1 கப், சீயக்காள் – 1 தேக்கரண்டி, வெந்தயம் – 1தேக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் – சிறிதளவு, அம்லா தூள் – 1 தேக்கரண்டி )மேற்கூறியுள்ள பொருள்களையெல்லாம் நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் தலைமுடியில் அப்ளே செய்து சுமார் 2-3 மணி நேரத்திற்கு அப்படியே விட்டுவிட வேண்டும். பின்னர் தலைமுடியை அலசிக்கொள்ள வேண்டும். இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை செய்துவரும் போது பொடுகு தொல்லை பிரச்சனை நீங்குகிறது.

  MORE
  GALLERIES

 • 46

  முடி ரொம்ப கொட்டுதா..? சீயக்காயை இப்படி அப்ளை பண்ணுங்க..!

  பலவீனமான கூந்தலுக்கான சிகிச்சை : உங்கள் தலைமுடி வலுவிழந்து உயிரற்றதாக இருந்தால், ஷிகாக்காயைப் பயன்படுத்தவும். 2 ஸ்பூன் சீயக்காய் தூளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் தயிரை நன்றாக கலந்துக்கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முடியின் வேர்கள் வரை தடவிய பின்னர் மசாஜ் செய்யவும். பின்னர் 30 நிமிடங்களுக்குப் பிறகு உங்களது தலைமுடியைக் கழுவிக்கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 56

  முடி ரொம்ப கொட்டுதா..? சீயக்காயை இப்படி அப்ளை பண்ணுங்க..!

  முடி உதிர்வு பிரச்சனைக்காக சிகிச்சை : அடிக்கடி முடி உதிர்தலைத் தடுப்பதற்கு நீங்கள் முட்டை மற்றும் சீயக்காய் கலந்து ஹேர் பேக் செய்துக்கொள்ளலாம். முட்டையில் உள்ள புரதங்கள் மற்றும புரோட்டீன்கள் உங்களது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே உங்களது தலைமுடி வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றால், நீங்கள் இதை வாரத்திற்கு ஒரு முறை முயற்சி செய்யலாம்.

  MORE
  GALLERIES

 • 66

  முடி ரொம்ப கொட்டுதா..? சீயக்காயை இப்படி அப்ளை பண்ணுங்க..!

  பளபளப்பான கூந்தலைப் பெறுதல் : உங்கள் தலைமுடிக்கு உடனடி பிரகாசத்தை சேர்க்க ஷிகாகாய் மற்றும் தேனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தேன் ஒரு மென்மையாக்கி என்பதால் இது உங்கள் தலைமுடியின் பொலிவை அதிகரிக்க உதவுகிறது. உங்களுக்கு தலைமுடி மிகவும் ட்ரையாக இருந்தால், அதை ஷாம்புக்குப் பதிலாக இதைப் பயன்படுத்தலாம். இவற்றை நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்துவதன் மூலம், இது உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்ற உதவுகிறது. அதே நேரத்தில் உங்கள் வேர்கள் மற்றும் முடி தண்டுகளை வலுப்படுத்தவும் இது உதவுகிறது.

  MORE
  GALLERIES