பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி முடியை பராமரிக்க அனைவருமே ஆசைப்படுகின்றனர். ஆனால் இன்றைக்கு முடி உதிர்தல் பிரச்சனை என்பது நம்மில் பெரும்பாலோனோருக்கு ஏற்படுகிறது. மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, மோசமான ஊட்டச்சத்து போன்ற பல்வேறு காரணிகளால் இப்பிரச்சனை ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இதற்குத் தீர்வு என்பது நாம் கடைகளில் வாங்கும் விலையுயர்ந்த எண்ணெய் மற்றும் ஷாம்புகளில் இல்லை என்றும் பழைய ஆயுர்வேத நடைமுறையை நாம் பின்பற்றினால் போதும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முடி உதிர்தல் பிரச்சனையை செய்யும் ஆயுர்வேத மூலிகைகள்.
தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை : முடி வளர்ச்சி மற்றும் முடி உதிர்தல் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை சிறந்த தேர்வாக அமையும். ஆயுர்வேத முடி பராமரிப்பில் ஒரு பிரபலமான மருத்துவ பொருளாகவும் இது உள்ளது. இதில் உள்ள லாரிக் அமிலம் முடி தண்டுக்குள் வரை ஊடுருவி புரத இழப்பைக் குறைக்க உதவுகிறது. மறுபுறம் கறிவேப்பிலையைலில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அமினோ அமிலங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்குகிறது. எனவே இதை நீங்கள் வழக்கமாகத் தலைமுடி பராமரிப்பில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் ஒரு கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி, ஒரு கைப்பிடி புதிய கறிவேப்பிலையைச் சேர்க்க வேண்டும். பின்னர் கலவையைக் குளிர்வித்து, தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.பினனர் 30 நிமிடங்களுக்கு ஷாம்பு வாஸ் செய்யலாம். இது மட்டுமின்றி நீங்கள் உபயோகிக்கும் எண்ணெய் கறிவேப்பிலை, மருதாணி போன்றவற்றையும் நீங்கள் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
கரிசலாங்கண்ணி எண்ணெய் : முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் பண்புகளைக் கொண்டது தான் கரிசலாங்கண்ணி. இதில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால், தலைமுடியின் வேர் வரை சென்று முடியை வலுப்பெற செய்கிறது. எனவே நீங்கள் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னதாக தலையில் அப்ளே செய்து விட்டு காலையில் தலைமுடியை அலசிட வேண்டும்.
வெங்காய சாறு : பல நூற்றாண்டுகளாக முடி வளர்ச்சியை ஊக்குவிக்குவதில் முக்கிய பங்கு வெங்காயத்திற்கு உள்ளது. இதில் உள்ள சல்பர், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், முடியை வலுப்படுத்தவும் உதவுகிறது. எனவே நீங்கள் உங்களது தலைமுடியை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்றால், வெங்காயச் சாற்றுடன் எண்ணெய், கறிவேப்பிலை, செம்பருத்தி கலந்து தேய்க்கலாம். இது தலைமுடிகைக்கு ஊட்டமளித்து முடி உதிர்வதைக் குறைக்கிறது மற்றும மீண்டும் முடி வளர உதவியாக உள்ளது.
நெல்லிக்காய் தூள்: நெல்லிக்காய்.. முடி வளர்ச்சிக்கு உதவும் இயற்கையான மூலிகையாகும். இதில் உள்ள சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வைத் தடுக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜனை உற்பத்தி செய்து ஆரோக்கியமான முடியைப் பராமரிக்க உதவுகிறது. சிறிது ஆம்லா தூளைத் தண்ணீர் கலந்து பேஸ்ட் போல் தயாரித்து முடியில் தடவி வர வேண்டும். பின்னர் 30 நிமிடங்களுக்குப் பிறகு வாஸ் செய்தால் போதும் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். நீங்கள் தேங்காய் எண்ணெய்யுடன் நெல்லிக்காய் பொடியைக் கலந்தும் நீங்கள் உபயோகிக்கலாம்.
இந்த இயற்கை வீட்டு வைத்தியங்கள் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கூந்தலைப் பெற உதவும் சிறந்த தேர்வுகளாக அமைகிறது. இது மட்டுமில்லாமல் ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது மற்றும் மன அழுத்தத்தை குறைப்பது போன்றவற்றைத் தவறாமல் நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.