குளிர்காலம் வெப்பத்தை குறைத்து ஈரப்பதமான காலநிலையை கொண்டு வருகிறது. ஆனால் குளிர்காலத்தில் தோல் மற்றும் முடி பிரச்சனைகள் ஏற்படும். குளிர்க்காலத்தில் வீசும் வறண்ட காற்று நமது சருமம் மற்றும் உச்சந்தலையை வறட்சி அடைய செய்கிறது. இதன் விளைவாக குளிர்காலத்தில் அதிகப்படியான முடி உதிர்வு ஏற்படுகிறது. இதுகுறித்து விளக்கும் ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்ஸா பவ்சர், குளிர்காலத்தில் முடி உதிர்வதை தடுப்பதற்கான டிப்ஸ்கள் குறித்து விளக்கியுள்ளார். அவர் கூறிய தகவலின்படி இந்த குளிர்காலத்தில் முடி உதிர்தலில் இருந்து உங்களை காப்பாற்ற இந்த எளிய டிப்ஸ்களை பின்பற்றவும்.
தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்கள் : தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவது உங்கள் கூந்தல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனை கடித்தும் சாப்பிடலாம், ஜூஸ் செய்தும் அருந்தலாம். நெல்லிக்காயில் விட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. எனவே நெல்லிக்காய் ஜூஸை நேரடியாக தலையில் மசாஜ் செய்து வருவதும் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. எனவே இந்த சாற்றை நேரடியாக தலையில் மசாஜ் செய்யலாம். பின்னர் ஷாம்பு போட்டு தலையை அலசிக் கொள்ளுங்கள்.
உணவில் கவனம் : குளிர்காலத்தில் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் உங்கள் அன்றாட உணவில் கவனம் செலுத்துவது நல்லது. குளிர்காலத்தில் இதமாக இருக்க சூடான நொறுக்கு தீனிகள், பாஸ்ட் புட் உணவுகளை சிலர் அதிகமாக உட்கொள்கிறார்கள். இதுவும் முடி உதிர்விற்கு ஒரு காரணமாக அமைகிறது. எனவே சூடான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உங்கள் வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள். மேலும் தினமும் உடற்பயிற்சி செய்வதும் அவசியம்.
உணவில் நெய் சேர்த்து கொள்ளுங்கள் : நெய் இந்த சிறந்த மாய்ஸ்சரைசராகும். மேலும் நெய்யில் இருக்கும் வைட்டமின் A, வைட்டமின் D, வைட்டமின் K2, வைட்டமின் E மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் முடிக்கு ஊட்டச்சத்து அளித்து தலை முடி உதிர்வை தடுக்கிறது. மேலும் இளநரைபிரச்சனை, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை சரி செய்யவும் தினமும் உணவில் நெய் சேர்த்து கொள்வது நல்லது.
மசாஜ் செய்யுங்கள் : அடிக்கடி தலை முடியில் நன்கு மசாஜ் செய்யுங்கள். உங்கள் விரல்களில் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை தொட்டு தலையில் நன்கு மசாஜ் செய்யுங்கள். எண்ணெய் ஸ்கால்பின் உள்செல்லுமாறு தேய்க்கவும். பின்னர் உங்கள் முடியை இறுக்கமில்லாமல் கட்டி ஒரு ஷவர் கேப் கொண்டு மூடவும். சிறிது நேரத்திற்கு பின்னர் ஷாம்பு கொண்டு வாஷ் செய்து வந்தால் கூந்தல் அடர்த்தியாக இருக்கும். மேலும் உறங்கும் போது பாதத்தை மசாஜ் செய்வதும் நல்லது.