ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையான சருமம் இருக்கும். அவை அவர்களின் ஜீன்களை பொறுத்தது. ஆனால், நம்மில் பெரும்பாலானோருக்கு ஆயில் ஸ்கின் இருக்கும். அவற்றை எப்படி பராமரிப்பது என தெரியாமல், தினமும் நொந்து நூலாகி விடுவோம். இயற்கையாகவே உடலில் எண்ணெய் அதிகம் சுரப்பதால், முகம், சருமத்தில் எந்நேரமும் எண்ணெய் வடிவது போன்ற உணர்வை தான் ஆயில் ஸ்கின் என்கிறோம். இந்த வகை சருமத்தை பராமரிப்பது எப்படி என இங்கு நாம் காணலாம்.
மென்மையான பேஸ் வாஸ்களை பயன்படுத்தவும் : எண்ணெய் சருமம் உள்ளவர்கள் அடிக்கடி முகத்தை கழுவுவதை நாம் பார்த்திருப்போம். அப்படி நீங்களும் அடிக்கடி முகத்தை கழுவுவராக இருந்தால், குறைந்த ரசாயனம் கொண்ட மென்மையான பேஸ் வாஸ்களை பயன்படுத்தலாம். மாறாக கடின பேஸ் வாஸ் பயன்படுத்துவது சருமத்தின் இயற்கை எண்ணையை வற்ற செய்துவிடும்.