மணக்க மணக்க சோப்பு போட்டு குளித்தாலும் உடலில் துர்நாற்றம் வீசுகிறதா..? உங்களுக்கான இயற்கை டிப்ஸ்தான் இது..!
வெளியே சென்று வருவோர் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது நல்லது. அதோடு ஆரோக்கியமான உணவுத் திட்டத்தை பின்பற்றுவதாலும் வியர்வை துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.


என்னதான் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளித்தாலும் சிலருக்கு வியர்வை துர்நாற்றம் வீசும். இதற்காக வாசனை திரவியங்களை நாடுவார்கள். ஆனால் அவற்றை விட இயற்கை வைத்தியங்கள் செய்து பார்த்தால் பலன் பெறலாம். எப்படி என்று பார்க்கலாம்.


கிரீன் டீ : கிரீன் டீ பைகளை தண்ணீரில் நனைத்து அக்குளில் தேய்த்துவிட்டு 10 நிமிடங்கள் காய விட்டு பின் கழுவ துர்நாற்றம் குறையலாம். இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் , நச்சு நீக்கும் பண்புகள் இருப்பதால் இது உங்களுக்கு உதவலாம்.


தக்காளி சாறு : உடலின் அதிகமாக வியர்வை வடிகிறது எபில் அதற்கு தக்காளி சாறை அக்குளில் தடவ வியர்கையைக் கட்டுப்படுத்தலாம்.


கல் உப்பு : அக்குளில் கல் உப்பை தேய்த்து சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின் கழுவ வியர்வை துர்நாற்றம் போகும்.


சோம்பு : சோம்பு லாக்ஸேட்டிவ் பண்புகளை உள்ளடக்கியது. இது செரிமாணத்திற்கான கெமிக்கல்களை உருவாக்கும். எனவே உணவின் மூலம் வரும் உடல் துர்நாற்றத்திற்கும் சோம்பு சமையலில் பயன்படுத்த சரியாகும்.


ரோஸ் வாட்டர் : ரோஸ் வாட்டரை வியர்வை துர்நாற்றம் வீசக்கூடிய இடங்களில் தடவி வர துர்நாற்றம் குறையும்.


வேப்பிலை : வேப்பிலையில் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் பண்பும், ஆண்டிசிபேடிக் பன்புகளும் அதிகமாக இருப்பதால் வேப்பிலையை அரைத்து அக்குளில் தடவி ஊற வைத்து பின் கழுவ கிருமிகள் அகலும். துர்நாற்றமும் இருக்காது.


ஆப்பிள் சிடர் வினிகர் : நச்சுத்தன்மையை உருவாக்கும் வியர்வை துளின்களின் துர்நாற்றத்தை நீக்கும் சக்தி ஆப்பிள் சிடர் வினிகருக்கு உண்டு. இதை தண்ணீரில் கரைத்து அக்குளில் தடவி ஊற வைத்து பின் கழுவுங்கள்.


எலுமிச்சை சாறு : சருமத்தின் பிஹெச் அளவை சரி செய்யும் ஆற்றல் எலுமிச்சைக்கு உண்டு. எனவே எலுமிச்சையை அக்குளில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து கழுவ நாற்றம் குறையும்.


மக்காச்சோள மாவு : மக்காச்சோள மாவில் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் உள்ளது. அதோடு வறட்சியையும் ஏற்படுத்தும் என்பதால் அதிக வியர்வையைக் கட்டுப்படுத்தி துர்நாற்றத்தையும் சரி செய்ய உதவும்.