முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பாதம் எண்ணெய் முதல் வெள்ளரிக்காய் வரை... உங்கள் கருவளையங்களை போக்குவதற்கான டிப்ஸ்...

பாதம் எண்ணெய் முதல் வெள்ளரிக்காய் வரை... உங்கள் கருவளையங்களை போக்குவதற்கான டிப்ஸ்...

பளபளப்பான முகத்தில் கரும்புள்ளி வைத்தாற்போல, கண்களை சுற்றியிலும் உள்ள கருவளையங்கள் மட்டும் அப்படியே நீடிக்கும்.

  • 17

    பாதம் எண்ணெய் முதல் வெள்ளரிக்காய் வரை... உங்கள் கருவளையங்களை போக்குவதற்கான டிப்ஸ்...

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அத்தகைய முகத்தை அழகாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள நாம் மேற்கொள்ளும் பல முயற்சிகளில் வெற்றி பெற்றிருப்போம். ஆனால், பளபளப்பான முகத்தில் கரும்புள்ளி வைத்தாற்போல, கண்களை சுற்றியிலும் உள்ள கருவளையங்கள் மட்டும் அப்படியே நீடிக்கும். சோர்வு, போதிய தூக்கமின்மை, வயது முதிர்வு போன்ற பல காரணங்களால் கருவளையம் ஏற்படுகிறது. கண்ணை சுற்றியிலும் கரு வளையம் வந்த உடன், அதுகுறித்து பெரிய அளவுக்கு கவலைப்பட வேண்டியதில்லை. வீட்டு முறை சிகிச்சைகள் மூலமாகவே அதை விரட்டியடிக்க முடியும்.

    MORE
    GALLERIES

  • 27

    பாதம் எண்ணெய் முதல் வெள்ளரிக்காய் வரை... உங்கள் கருவளையங்களை போக்குவதற்கான டிப்ஸ்...

    பாதாம் எண்ணெய் : ஒரு மெல்லிய பருத்தி துணி எடுத்து, அதில் 2 அல்லது 3 சொட்டுகள் பாதாம் எண்ணெய் விட்டு கண்களை சுற்றியிலும் மசாஜ் செய்வதன் மூலமாக கருவளையத்தை விரட்டியடிக்க முடியும் என்று அழகுக்கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தினசரி ஒரு சில நிமிடங்கள் மசாஜ் செய்த பிறகு முகத்தை கழுவ வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 37

    பாதம் எண்ணெய் முதல் வெள்ளரிக்காய் வரை... உங்கள் கருவளையங்களை போக்குவதற்கான டிப்ஸ்...

    கற்றாழை ஜெல் : ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்து, அதை வைத்து கருவளையத்தின் மீது ஓரிரு நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இரவு தூங்கும் முன்பாக இதை செய்துவிட்டு அப்படியே தூங்கி விடலாம். காலையில் எழுந்த பிறகு இதை சுத்தம் செய்து கொள்ளலாம். தினசரி கற்றாழை பயன்படுத்துவதால் சருமத்திற்கு நீர்ச்சத்து கிடைக்கும். கருவளையம் வலுவிழக்க தொடங்கும்.

    MORE
    GALLERIES

  • 47

    பாதம் எண்ணெய் முதல் வெள்ளரிக்காய் வரை... உங்கள் கருவளையங்களை போக்குவதற்கான டிப்ஸ்...

    வெள்ளரிக்காய் : விட்டமின்கள் நிறைந்த வெள்ளரிக்காய் கருவளையங்களை நீக்குவதற்கு உதவும். வெள்ளரிக்காய் பேஸ்ட் உடன் கற்றாழை ஜெல் சேர்த்து அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவிக் கொள்ளலாம். வெள்ளரிக்காயில் உள்ள விட்டமின்கள் காரணமாக நமது சருமம் பளபளப்பாக மாறும்.

    MORE
    GALLERIES

  • 57

    பாதம் எண்ணெய் முதல் வெள்ளரிக்காய் வரை... உங்கள் கருவளையங்களை போக்குவதற்கான டிப்ஸ்...

    தக்காளி : சருமத்தில் ஏற்படும் கதிர்வீச்சு பாதிப்புகளை சரி செய்யக் கூடியது தக்களி ஆகும். தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பேஸ்ட் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவிக் கொள்ளலாம். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை செய்தால் போதுமானது.

    MORE
    GALLERIES

  • 67

    பாதம் எண்ணெய் முதல் வெள்ளரிக்காய் வரை... உங்கள் கருவளையங்களை போக்குவதற்கான டிப்ஸ்...

    எலுமிச்சை சாறு : விட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சை சாறு எடுத்து, கருவளையத்தை சுற்றியிலும் மசாஜ் செய்தால், நமது சருமத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். எலுமிச்சை சாறு பயன்படுத்துவதால் கருவளையத்தின் அடர்த்தி குறையத் தொடங்கும். வாரத்திற்கு இரண்டு முறை இதைப் பயன்படுத்துவதன் மூலமாக நல்ல பலன்களைப் பெறலாம். அடிக்கடி எலுமிச்சை சாறு பயன்படுத்தக் கூடாது. அது எரிச்சலை ஏற்படுத்தக் கூடும்.

    MORE
    GALLERIES

  • 77

    பாதம் எண்ணெய் முதல் வெள்ளரிக்காய் வரை... உங்கள் கருவளையங்களை போக்குவதற்கான டிப்ஸ்...

    ரோஸ் வாட்டர் : கருவளையத்தை போக்குவதற்கு எளிமையான தீர்வளிக்கக் கூடியது ரோஸ்வாட்டர் ஆகும். நமது சருமத்திற்கு புத்துணர்ச்சி மற்றும் புதுப்பொழிவை தரக் கூடியது. இதனுடன் கற்றாழை ஜெல் கலந்தும் அப்ளை செய்து கொள்ளலாம்.

    MORE
    GALLERIES