தென்னிந்திய நடிகைகள் பலரும் தங்களது ஆடை மற்றும் அலங்காரத்தால் இளம் பெண்களின் பேஷன் ஐகானாக வலம் வருகின்றனர். இதில் குறிப்பாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமந்தா, ஹன்சிகா மோத்வானி, ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரது பேஷன், ஸ்டைல், மேக்கப், மார்டன் டிரஸ் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காகவே இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான ரசிகைகள் பாலோ செய்கின்றனர்.பிரபலங்களும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்பெஷல் டிசைனர்கள் மூலமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகள், பிரத்யோகமான ஹேர்ஸ்டைல், மேக்கப் ஆகியவற்றுடன் போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அப்படி தென்னிந்திய நடிகைகள் பலரும் பதிவிடும் புகைப்படங்களில் காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல், மேக்கப், ஜூவல்லரி ஆகியவற்றை விட தற்போதை இளம் தலைமுறை பெண்களை அதிகம் கவர்ந்திழுக்கும் விஷயம், அவர்களது ஹேர் கலர் ஆகும். அதனால் தான் இன்று நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் பயன்படுத்தும் ஹேர் கலர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை கொண்டு வந்துள்ளோம்.சமந்தா முதல் நயன்தாரா வரை தென்னிந்திய நடிகைகள் பயன்படுத்தும் ஹேர் கலர் சீக்ரெட் குறித்து பார்க்கலாம்...
1. ராஷ்மிகா மந்தனா: தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ராஷ்மிகா மந்தனாவிற்கு முழு தலைமுடியையும் கலர் செய்ய பிடிக்காது. ஆனால் மார்டன் லுக்கை விரும்பும் ராஷ்மிகா, தனது முடியை முழுவதுமாக ஹேர் கலரிங் செய்வதற்கு பதிலாக, அங்காங்கே ஹைலட் மட்டும் செய்து கொள்ள விரும்புவாராம்.
2. ஹன்சிகா மோத்வானி: தென்னிந்திய ரசிகர்களால் ‘குட்டி குஷ்பு’ என செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா மோத்வானி, சமீபத்தில் சினிமாவில் நடிக்காவிட்டாலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வருகிறார். ஆடை விஷயத்தில் செம்ம மார்டன் மற்றும் கிளாமரை விரும்பும் ஹன்சிகா மோத்வானி, பாலயேஜ் எனப்படும் ஹேர் கலர் முறையை விரும்புகிறார். இது பிரெஷ் மூலமாக கூந்தலின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் வர்ணம் தீட்டுவது போன்றது ஆகும்.
5. சமந்தா: தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா விரைவில் ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கப்போகிறார். சமந்தாவை அவரது ஹேர் ஸ்டைல் மற்றும் டிரஸ்ஸிங் சென்ஸுக்காக மட்டுமே சோசியல் மீடியாவில் பின்தொடருவோர் ஏராளம். விதவிதமான ஹேர் ஸ்டைலை விரும்பும் சமந்தா, பெரும்பாலும் சிறப்பான வர்ணங்களையே தனது முடிக்கு தேர்வு செய்கிறார். தற்போது சமந்தா பயன்படுத்தி வரும் செம்பழுப்பு நிற ஹேர் கலரிங் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறது.
6. கீர்த்தி சுரேஷ்: ஹோம்லி ப்ளஸ் மார்டன் கேரக்டரில் நடிப்பதில் பெயர் போனவர் கீர்த்தி சுரேஷ். தனது நடிப்பு, அழகு, டிரஸ்ஸிங், மேக்கப் ஆகியவற்றால் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஓட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கட்டிப்போட்டுள்ளார். பாரம்பரியமான பழக்க வழக்கங்களை கொண்ட கீர்த்தி சுரேஷுக்கு, ஹேர் கலரிங் செய்து கொள்ளவது என்பது பிடிக்காத ஒன்று. இருப்பினும், சினிமாவில் நடிப்பதற்காக அடர் பழுப்பு நிற ஹேர் கலரிங்கை பின்பற்றுகிறார்.
9. நயன்தாரா: ‘லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்’ என்பது போல் கடைசியாக நாம் பார்க்கப்போவது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இளம் பெண்களுக்காக விதவிதமான ஹேர் ஸ்டைல் மற்றும் உடைகளை அறிமுகப்படுத்துவம் நடிகைகளின் பட்டியலி நயன்தாரா முன்னிலையில் உள்ளார். அதேபோல் ஹேர் கலரிங் விஷயத்திலும் நயன்தாரா படத்திற்கு படம் பல வகையான வித்தியாசங்களை காட்டியுள்ளார். படம் ஒன்றிற்காக சிவப்பு நிற ஹேர் ஹைலைட்டிங்கை நயன் பயன்படுத்தியது, ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.