முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பருக்கள் முதல் பொடுகு வரை... வேம்பின் நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

பருக்கள் முதல் பொடுகு வரை... வேம்பின் நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

வேப்பிலை மற்றும் பூ உள்ளிட்டவை பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், இதை பொடுகுக்கு ஒரு சிறந்த சிகிச்சை பொருளாக பயன்படுத்தலாம்.

 • 19

  பருக்கள் முதல் பொடுகு வரை... வேம்பின் நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

  இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் முதன்மை இடம் பிடித்துள்ள மூலிகைப் பொருள்களில் ஒன்று தான் வேம்பு. அம்மை முதல் பல்வேறு உடல் நலப்பிரச்சனைகளுக்கு நன்மை தருவது மட்டுமின்றி சருமத்தை அழகுபடுத்தவும் வேம்பு உதவியாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 29

  பருக்கள் முதல் பொடுகு வரை... வேம்பின் நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

  இதில் ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இவை சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களை எதிர்க்க உதவுகிறது. இதுபோன்று சரும பராமரிப்பில் வேம்பு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது என்றும் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

  MORE
  GALLERIES

 • 39

  பருக்கள் முதல் பொடுகு வரை... வேம்பின் நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

  முகப்பருவை எதிர்த்து... வேம்பில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவுகிறது. எனவே வேப்ப இலைகளை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் அப்ளை செய்தால் முகப்பரு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளை சரி செய்கிறது.

  MORE
  GALLERIES

 • 49

  பருக்கள் முதல் பொடுகு வரை... வேம்பின் நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

  வறண்ட சருமத்தை...வேம்பில் அதிக அளவு கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் உள்ளதால், இவற்றை முகத்தைத் தடவினால் சருமத்தை ஹைட்ரேட்டாக்குகிறது. இதன் மூலம் வறண்ட சருமத்தை மென்மையாக மற்றும் மிருதுவாக மாற்றுகிறது

  MORE
  GALLERIES

 • 59

  பருக்கள் முதல் பொடுகு வரை... வேம்பின் நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

  எரிச்சலூட்டும் தோலை... வேம்பு அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால், தோலழற்சி மற்றும் தடிப்புத் தோல் அழற்சி போன்றவை சரிசெய்கிறது. தோல் சிவத்தல், அரிப்பு மற்றும் தோல் வீக்கத்தைக் குறைக்க உதவியாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 69

  பருக்கள் முதல் பொடுகு வரை... வேம்பின் நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

  முதுமையை... வேம்பில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. எனவே வேப்பம் பூ, இலை போன்றவற்றை நாம் வழக்கமான முறையில் பயன்படுத்தும் போது, தோலில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்கிறது. மேலும் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும் உதவியாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 79

  பருக்கள் முதல் பொடுகு வரை... வேம்பின் நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

  பொடுகுக்கு... வேப்பிலை மற்றும் பூ உள்ளிட்டவை பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், இதை பொடுகுக்கு ஒரு சிறந்த சிகிச்சை பொருளாக பயன்படுத்தலாம். இது பொடுகை ஏற்படுத்தும் பூஞ்சையை நீக்குகிறது மற்றும் உச்சந்தலையில் அரிப்பு மற்றும் செதில்களை குறைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 89

  பருக்கள் முதல் பொடுகு வரை... வேம்பின் நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

  ஹைப்பர் பிக்மென்டேஷனை... வேப்பம்பூவின் பயன்பாடு ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது, இது தோலில் கருமையான திட்டுகளை ஏற்படுத்தும் பொதுவான தோல் நிலையாகும். இது சருமத்தை ஒளிரச் செய்வதோடு, சருமத்தின் நிறத்தையும் சமன் செய்து, அதிக பொலிவான நிறத்தை அளிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 99

  பருக்கள் முதல் பொடுகு வரை... வேம்பின் நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

  இவ்வாறு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளதால் இனி எவ்வித பேஸ் கிரீம்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நீங்கள், வேம்பை உபயோகிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES