நம் தோற்றத்திற்கு அழகு சேர்ப்பதில் முடிக்கு பிரதான பங்கு உண்டு. ஆனால், முடி உதிரும் பிரச்சனை தான் மிகப் பெரிய தொந்தரவாக அமைகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக தலையில் சேரும் தூசுகள், துரிதமான வாழ்வியல் சூழல், தலைக்கு நாம் பயன்படுத்தும் ஷாம்பு மற்றும் இதர பொருட்களில் உள்ள ரசாயனங்கள் உள்பட முடி உதிர்வுக்கு பல காரணங்கள் இருக்கின்றன.
மீன் : புரதம் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த மீன் உணவில் புரதம் ஏராளமாக உள்ளது. இது முடி உதிர்வை தடுக்கும். மீன் சாப்பிட்டால் அதில் கிடைக்கும் புரதச்சத்து மூலமாக நமது மயிர் கால்கள் வலுவடையும். இது மட்டுமல்லாமல் முடி உதிர்வை தடுக்கும் விட்டமின் ஏ, கே டி மற்றும் இ ஆகியவையும் மீன்களில் உள்ளன.
பால் மற்றும் முட்டை : பால், தயிர் மற்றும் முட்டை ஆகியவை புரதம் அதிகமுள்ள உணவுகளாகும். தினசரி இவற்றை சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வதை தடுக்கலாம். இரும்புச் சத்து, பி12, ஃபேட்டி ஆசிட் உள்ளிட்டவை இந்த உணவுகளில் உள்ளன. இவை முடியின் வேர்களை பலப்படுத்துகிறது. முடி வளர்ச்சிக்கு தேவையான பயோடின் என்ற சத்து முட்டையில் உள்ளது.