குழந்தை பருவத்தில் உங்களது சருமம் மிகவும் மென்மையாக இருந்திருக்கும், சிலருக்கு டீனேஜில் கூட அந்த மிருதுவான சருமம் இருந்திருக்கும். மென்மையாக இருந்த சருமம் தற்போது வேறுமாதிரி ஆகிவிட்டது என்று நீங்கள் கவலை கொள்கிறீர்களா.? கவலை வேண்டாம்.. உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்தால் போதும். நீங்கள் பிறர் பொறாமைப்படும் அளவிற்கான மிருதுவான சருமத்தை மீண்டும் பெறலாம்.! வயது முதிர்வு காரணமாக சருமம் பாதிப்படைவதை தவிர சரியான வாழ்க்கை முறை பழக்கங்களை கடைபிடிக்காததன் காரணமாகவும் சருமம் பாதிப்படைகிறது. குழந்தை பருவத்திலிருந்த மென்மையான சருமத்தை மீண்டும் பெற நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 தினசரி பழக்கங்களை இங்கே பார்க்கலாம்..
ஆரோக்கியமான உணவு: ஆரோக்கியமான சருமத்திற்கு சீரான உணவும் முக்கியம். நாம் சாப்பிடும் உணவில் நமது சரும ஆரோக்கியம் தொடர்பான அனைத்தும் அடங்கி உள்ளது. உணவில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் கொலாஜன் உற்பத்தி மற்றும் ஆரோக்கியமான செல் சவ்வுகளை ஆதரிக்கின்றன. தவிர UV வெளிப்பாடு போன்ற தீங்குகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கின்றன.
சிரிப்பு: சிரிப்பதற்கும் சரும ஆரோக்கியத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா.? நாம் சிரிக்கும் போது சருமத்தில் ரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். மேலும் அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை தோல் பெறுகிறது. இது உங்கள் சருமத்திற்கு ஆரோக்கிய நிறத்தை தருவதோடு மன அழுத்தத்தை போக்கி மகிழ்ச்சியாகவும் முகத்தை பொலிவாகவும் வைக்க உதவுகிறது. எனவே சரும பொலிவை பெற முடிந்த போதெல்லாம் சிரியுங்கள்.
தண்ணீர்: நம் உடலில் சுமார் 70% தண்ணீர் இருக்கிறது. எனவே தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சருமத்தை ஆரோக்கியமாக, ஹைட்ரேட்டாக வைத்திருக்க எளிய வழி. நாள்தோறும் பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீர் குடிப்பது, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி முகப்பரு உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்கிறது. முக பொலிவை அதிகரிக்க செய்கிறது.
தினசரி உடற்பயிற்சி: கலோரிகள் எரிக்கப்படும் போது, உடல் என்டோர்பின்கள் எனப்படும் கெமிக்கல்களை உற்பத்தி செய்கிறது. இது மூளையில் உள்ள ஏற்பிகளுடன் தொடர்பு கொண்டு நேர்மறை உணர்வு மற்றும் மகிழ்ச்சி எண்ணங்களை தூண்டுகின்றன. சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகின்றன. இவை அனைத்தும் உங்கள் சருமத்தில் பிரதிபலித்து முகத்தை பளபளப்பாக மற்றும் பொலிவாக வைத்திருக்க துணை புரிகின்றது.