உங்கள் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மரபு ரீதியான காரணங்களாலும் முகத்தில் கொழுப்புகள் படியத் தொடங்கும். சில பெண்கள் பார்ப்பதற்கு ஒல்லியாக இருப்பார்கள். ஆனால், முகத்தில் ஏராளமான கொழுப்புகள் இருக்கும். அதை குறைத்து, அழகான கன்னத்தை கொண்டு வருவது மிக கடினம் ஆகும். கொழுப்பை குறைக்க ஏராளமான உடற்பயிற்சிகள் உண்டு என்றாலும், அதனுடன் குறிப்பிட்ட சில உணவுகளை நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.